பக்கம்:புதிய கல்வி முறை-10-2-3.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 கர்சரியில் தாய்மொழிக்கு முதலிடம் வழங்கல் வேண்டும் பின் முதல் வகுப்பில் ஆங்கிலம், இந்தி இரண்டினேயுமோ இரண்டில் ஒன்றையோ புகுத்தலாம். மூன்ருவது வகுப்பு வரும்போது கட்டாயம் மும்மொழித் திட்டம் செயல்பட வேண்டும். அந்த மும்மொழித் திட்டம் பத்தாம் வகுப்பு வரையில் (புதுமுறை) டிேக்கலாம். அன்றி மத்திய கல்விக் குழுவின் இன்றைய அமைப்பின்படி எட்டாம் வகுப்பிலேயே நிறுத்தப் பெறலாம். ஆயினும் அதன் தேர்வைத் தற்போதுள்ளபடி பள்ளியிடம் விட்டுவிடாது குழுவே பொறுப் பேற்று கடத்தி, தாள்களைத் திருத்தி, தக்கவர்களே வெற்றி பெறச் செய்தல் வேண்டும். எட்டாம் வகுப்பில் ஒரு மொழி முடியுமானல் மற்றைய இரண்டு மொழிகளேயும் அதிக பாடத் திட்ட அமைப்புகளோடு ஒன்பது, பத்து என்ற இருவகுப்புகளிலும் சொல்லித்தர ஏற்பாடு செய்ய வேண்டும். மொழியின் முட்டறுத்த நல்லதிறன் பத்தாம் வகுப்பின் எல்லையில்-பள்ளிப் படிப்பின் எல்லேயில் மாணவர் பெற்ருலன்றி, பின் மேலே பயிலும் படிப்புக்கள் அனைத்தையும் புரிந்து கொள்ளும் திறனே, புரியவைக்கும் திறனே அவர்கள் பெற இயலாது. தொடர்ந்துவரும் இடைகிலே வகுப்பில் மொழித்திட்டம் பற்றி இன்னும் நம் மாநிலத்திலும் மத்திய கல்விக் குழுவிலும் முடிவு செய்யப் பெறவில்லை. மத்திய கல்விக் குழு ஓரிருமாதங்களில் முடிவு செய்து விடலாம். ஆயினும் மாராட்டிய மாநிலத்தும் அண்டை நாடுகளாகிய ஆந்திரம், கேரளம், கருநாடகம் ஆகியவற்றிலும் மொழியின் அவசியம் போற்றப் பெறுகின்றது. நம் மாநிலத்திலும் விரைவில் பாடத் திட்டம் உருவாகும். அந்த இடைகிலே வகுப்பே ஒரு பேரேரியாக இருந்து, பல மதகுகள் வழியே பல்வேறு துறைகளுக்கு மாணவர்களே அனுப்பப் போகின்றமையின் அங்கே மொழி கட்டாயம் முக்கிய இடம் பெறல் வேண்டும்.