பக்கம்:புதிய கல்வி முறை-10-2-3.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 மாண்வர் எந்தத் துறையினை எடுத்துக் கொண்டாலும் அந்தத் துறையில் சிறந்து விளங்கவும் தெளிவு பெறவும் மொழி அறிவு இன்றியமையாததாகின்றது. எதையும் மொழியினைக் கொண்டே விளக்க வேண்டியுள்ளமையின் மொழியே எல்லாவற்றிற்கும் அடிப்படையாக அமை கின்றது. எனவே இந்த இடைநிலையில் மொழிப்பயிற்சி' (எவையேனும் இருமொழி-தாய் மொழி-நாட்டு மொழிஆங்கிலம் இவற்றுள்) மிகவும் இன்றியமையாது வேண்டப் பெறும். . மொழிப் பயிற்சியின் அடிப்படையில் வெறும் இலக் கியங்களை மட்டும் படிப்பது போதாது. சமுதாய வாழ்வுக்கு. ஏற்ற வகையில் அமைந்த எல்லாத் துறைகளிலும் ஒவ்வொருவரும் எழுத்தாற்றல் பெற்றவராதல் வேண்டும். எவ்வளவு படித்தாலும் எழுத்தாலும் பேச்சாலும் விளக்க முடியாதவர் பலர் இன்று நாட்டில் வாழ்வதைக் காண் கிருேம். அதேைலயே 'ஆர்த்த சபை நூற்ருெருவர், ஆயிரத் தொன்ரும் புலவர்-வார்த்தை பதியிைரத் தொருவர்' என்ற பாடலும் தமிழ் நாட்டில் எழுந்தது. எனவே இந்த இடை நிலைப் பாடத்திட்டத்தில் பயிலும் ஒவ்வொருவரும் தாம் கற்றவற்றையும் கருதியவற்றையும் எழுத்திலும் பேச்சிலும் எளிதில் எல்லோருக்கும் விளக்கும் வகையில் மொழித்திறன் பெற்றவராதல் வேண்டும். இதற்கெனப் பாடத்திட்டங்களை அமைக்கத் திறன் வாய்ந்த நல்ல மொழிப் பேராசிரியர்கள் அழைக்கப் பெறல் வேண்டும். பின் கல்லூரிப் படிப்பின், போது மொழி இருப்பினும் இல்லாதிருப்பினும், இங்கே பெறுகின்ற மொழித்திறன் அவர்களே நாட்டுத் தலைவர் களாக்கப் பயன்பெறல் வேண்டும். கல்லூரியில் மொழிப்பாடம் தேவையா வேண்டாமா என்பது பற்றிப் பலர் பல்வேறு வகைப்பட்ட கருத்துக் களைத் தெரிவிக்கின்றனர். புதிய பாடத் திட்டத்தில் அது