பக்கம்:புதிய கல்வி முறை-10-2-3.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 1979க்குப் பின்பு வரவேண்டியுள்ளமையின் பிறகு பேசி முடிவு செய்ய வேண்டிய ஒன்று; அதுபற்றி இங்கே ஆய்வு தேவை இல்லை எனக் கருதுகின்றேன். மொழிக் கொள்கைகள் நாளுக்கு நாள்-மாநிலத்துக்கு மாநிலம் மாறிக் கொண்டே வருகின்ற இந்த நாளில் எத்தகைய முடிவையும் அறுதியிட முடியாது. எனினும் ஒன்றை மட்டும் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். மாநிலங்களில் எத்தகைய ஆட்சிமுறை அமையினும்-எந்தக் கட்சி ஆளும் கட்சியாயினும் - ஒவ்வொரு கட்சியும் தன் மனம்போன போக்கில் தம் மொழிக் கொள்கையை வற்புறுத்தா வகையில் - இந்திய நாடு ஒரே நாடு என்ற உணர்வில்-யார் வரினும் யார் போயினும் மாற்றமுடியாத ஒரு நிலையான மொழிக் கொள்கையை மத்திய அரசாங்கமும் அரசியல் சாசனமும் உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு செய்தாலன்றி காட்டின் ஒற்றுமையோ ஒருமைப்பாடோ நிலவுவது அரிது. இதை நன்கு உணர்ந்து உடனடியாக மத்திய அரசு செய லாற்ற வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளுகிறேன். இனி, பள்ளிப் படிப்பில் அமைய வேண்டிய பாடத் திட்டங்களைப் பற்றி எண்ணிப் பார்க்க வேண்டும். தில்லியில் இயங்கும் மத்திய கல்விக் குழு ஏற்கெனவே 9 10 ஆகிய இருவகுப்புகளுக்கும் பாடங்களை அமைத்துள்ளது. அதன்படி 1977 மார்ச்சில் முதல் முறையாகப் பத்தாம் வகுப்பு மாணவர் தேர்வு எழுதப் போகிருர்கள். மராட்டிய .மாநிலத்தில் சென்ற ஆண்டே பாடங்கள் அமைக்கப் பெற்றுத் தேர்வுகளும் நடக்கின்றன. அங்கே மேல் 11, 12 ஆகிய இருவகுப்புகளும் தொடங்கப் பெற்று அவற்றுள் ஒவ்வொன்றிலும் அரசாங்கத் தேர்வு நடைபெற ஏற்பாடு செய்தனர். ஆயினும் அதில் பின்னர் மாற்றம் நேர்ந்தமை அறிகிறேன். கேரள, கருநாடக, ஆந்திர மாநிலங்களில் ஒரு சில ஆண்டுகளாகவே இவை இரண்டும் செயல்படுகின்றன.