பக்கம்:புதிய கல்வி முறை-10-2-3.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 அடிப்படைப் பாடங்களாகிய அறிவியல், கலை, கணக்கு முதலியவற்றின் நிலையில் அமைந்தவைகளுக்கு ஒரே வகையான பாடத்திட்டம் இருக்க வேண்டும்;அவ்வம் மாநில மொழியும் இந்திய மொழியும் ஆங்கில மொழியும் தேவை. யாயின் மற்ருெரு மொழியும் கட்டாயமாக இடம் பெறல் வேண்டும். அவற்றுள் ஒன்றிரண்டு உயர் மட்டத்திலும் (Higher Level) ini pona Ey udLL-ġĝgih (Lower level) அமையலாம். இவ்வாறு மத்திய கல்வி அமைச்சகம் நாடு முழுவதற்கும் ஒரு வகையான மொழி அடிப்படையில் அமைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தினை அமைப்பின் நாட்டில் ஒற்றுமை நிலவுவதோடு, அடிக்கடி மாற்றப்பெறும் பணிபுரியும் பெற்ருேர்களுக்கும் தங்கள் பிள்ளைகளின் கல்வியில் சிக்கல் இருக்காது. ஆனல் இப்போது ஒரு மாநிலத்திலேயே பலவகையான கல்வி முறைகள் உள்ளன. தமிழகத்தை எடுத்துக் கொள்வோம். ஒரே நிலையில் மாநில அரசு கடத்தும் எஸ். எஸ். எல், சி. எனப் பயிற்றப் பெறும் பெரும்பாலான பள்ளிகள் ஒரு பக்கம்; மெட்ரி குலேஷன்' என்ற பெயரில் பல்கலைக் கழகங்கள் நடத்தும் பள்ளிகள் ஒரு பக்கம்; மத்திய உயர் கல்விக்குழு நடத்தும் பள்ளிகள் ஒரு பக்கம்; ஐ.எஸ்.சி போன்ற தேர்வு களுக்கு அனுப்பும் பள்ளிகள் ஒரு பக்கம்; ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள் ஒரு பக்கம்; இடையில் ஜனவரி முதல் டிசம்பர் வரை சில பள்ளிகள்; சூன் முதல் ஏப்பிரல் வரை பல பள்ளிகள். இப்படிப் பல வகைப் பள்ளிகளில் பலவகையான பாடத் திட்டங்களில் மாணவர் பயிற்றப் பெறுகின்றனர். அவற்றின் அமைப்பும், தேர்வு முறையும் பிறவும் தனித்தனியாக உள்ளன. இவை அனைத்தும் இயங்க ஒரே அரசாங்கம் தான் இசைவு. தந்துள்ளது. இவை தேவை தான என எண்ணிப் பார்க்க வேண்டும். மாநில அரசாங்கமோ . ஏன் - மத்திய அரசாங்'