பக்கம்:புதிய கல்வி முறை-10-2-3.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 கமும் கூடத்தான் தன் கொள்கையைச் சில பள்ளிகளில் செயலாற்ற முடிவதில்லை. ஆனல் அனைத்தும் அரசாங்க இசைவு பெற்றே நடைபெறுகின்றன. ஒரு சிலருக்கு ஒரு சில சலுகைகள் தர வேண்டும் என்ற நிலை மாறி இக் நாட்டில் வாழும் எல்லோரும் சமம் என்ற உணர்வில் இக் கல்விப் பிரச்சினையை அணுக வேண்டும். இதே கிலே, இடைகிலே இரு வகுப்புகளிலேயும் இருப்பதை அறிகிருேம். சேரும் மாணவர் தகுதி, ஆசிரியர் தகுதி, பாடம் நடத்தும் முறை, பாடத் திட்ட அமைப்பு முறை, தேர்வு முறை முதலியவை இடத்துக்கு இடம் மாறுவதால், அனேத் திந்தியப் போட்டிகளில் கலந்து கொள்ளும்போது அநேக மாணவர்கள் இடர்ப்படுகிருர்கள். உதாரணமாக மாநிலக் கல்விநெறியாளரின் கீழ் நடத்தப் பெறும் பள்ளிகளில் தாய்மொழியே பயிற்று மொழியாக உள்ளது. எனவே பாடங்கள் எளிதாகவும் உள்ளன. எனவே தேர்வில் 600க்கு 550 எண் வரையில் வாங்க முடிகிறது. மெட்ரிகு லேஷன் தேர்வு முறை ஆங்கிலத்தில் இருப்பினும் ஒரு சில பள்ளிகளே உள்ளமையின் தேர்வில் அவர்கள் அதிக எண்கள் பெற்றுப் பயனடைய வாய்ப்பு உண்டாகிறது. மத்திய கல்விக் குழுவின் பாடத் திட்டம் அதிக கடின மானது என அனைவரும் உணர்கின்றனர். தேர்வும் அனைத் திந்திய அடிப்படையில் நடைபெறுகின்றது, மாணவர் கிலே மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது. எனவே, தேர்வில் அதிக எண்ணுே குறியீடோ பெறமுடிவதில்லை. இவர்கள் அனைவரும் அனைத்திந்தியத் தேர்தல் போட்டியிலேயோ கல்லூரியில் சேரும் முறையிலோ பிற பணி பற்றியோ போட்டியிட்டால், அதிக எண் பெறுபவர்கள் இடபெறுவது இயல்பு. அதிகமான பாடங்களே ஆழ்ந்து பயின்றும் சிலர் தகுதி பெற முடியாமல் போகின்றது. இங்கிலே வைத்தியக் கல்லூரி, பொறியியற் கல்லூரி போன்ற 5