பக்கம்:புதிய கோணம்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 புதிய கோணம்

வார்த்தல், சிந்துதல், கொட்டல் என்ற இத்தனை சொற்களும் ஏறத்தாழ ஒரே பொருளுடையன ஆயினும், இந்தச் சந்தர்ப்பத்திற்கு ஏற்ற சொல் “பெய்தல் என்பதுதான். கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றும் செயலும், நிறையவே ஊற்றும் செயலும் ‘பெய்தல் என்ற சொல்லில் அமைந்து கிடக்கக் காண்கிறோம். கொடுக்கப்படுகிற நஞ்சு சொட்டுக் கணக்கில் இல்லாமல் மிகுதியும் இடப்பட்டிருத்தலை இச்சொல் அறிவிக்கிறது. பெய்தல் என்று இவ் விடத்தில் உள்ள சொல்லுக்கு இடுதல்’ என்பது நேரடியான பொருளாயினும், அச்சொல் ஒசையால் மிகுதியும் பெய்யப்பட்ட ஒரு செயலை நம் எண்ணத்தில் தூண்டுகிறது. இதனைத் தான்

முன்னர் GT ஊட்டுச் சக்தி என்று

குறிப்பிட்டோம்.

அடுத்துள்ள கண்டும் என்ற சொல்லைக்

காண்போம். நஞ்சிடுவதைக் காணுதவராயின்

பாலென நினைத்து உண்டு மடிபவர் உண்டு. ஆனல் தாம் உண்ணப்போகும் உணவு என்று அறிந்து அதில் பிறர் நஞ்சை மிகுதியாகப் பெய்தலை யாரும் பார்த்துக்கொண்டு வாளா இருத்தல் இயலாத காரியம். ஏதோ தெரிந்தும் தெரியாமலுமாக ஐயத்தை தோற்றுவிக்கின்ற முறையில் கலக்கப்பெற்ற நஞ்சன்று; கண்களால் நன்கு கண்டு கொண்டிருக்கும்போதே அள்ளி ஊற்றப் பெற்றது என்பதை அறிவித்தற்குக் கண்டும் என்ற சொல்லை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/114&oldid=659816" இலிருந்து மீள்விக்கப்பட்டது