பக்கம்:புதிய கோணம்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 புதிய கோணம்

கரப்பவர்க்கு (1070), எழுதுங்கால் (285) என்பன போன்ற குறள்கள் சிறந்த கற்பனைக்கு உதாரணங்கள்.

ஒரு கவிஞனுடைய திறமையை உள்ளவாறு மதிப்பிட உதவுவது அவனுடைய உவமைத்திறன் என்று கூறினால் மிகையாகாது. நாம் அன்றாடம் கண்டும் காணாத பொருள்களினிடத்து உள்ள அரிய இயல்புகளைக் கவிஞன் கண்டு, சமயம் வரும் பொழுது அவற்றைத் தக்கவாறு பயன்படுத்துகிறான். இவ்வாறு பயன்படுத்தும் உவமை அவனுடைய கல்வி, இயற்கை அறிவு, அநுபவம், பரந்த மனப்பான்மை, நுனித்துக் காணும் காட்சி முதலிய வற்றிற்கு ஏற்பத் தோன்றும். மனிதன் தன் நிலையினின்று தாழாது இருக்கும் வரையில் மனிதனுக் குரிய மதிப்பைப் பெறுகிறான். அந்நிலையிலிருந்து ஒரு சிறிது கீழிறங்கினாலும் அம்மதிப்பை இழந்துவிடுகிறான்’ என்ற கருத்தை விளக்கவருகிறார் ஆசிரியர். இப்படியே கூறிவிட்டால் ஒர் ஐயம் வரக்கூடும். அவன் இழைத்த தவற்றின் அளவாகத்தானே தாழ்வும் வரும்? சிறு தவறு இழைத்தால் பெருந்தாழ்வு வந்துவிடுமா? என்ற ஐயமே அது. இத்தகைய ஐயத்திற்கு விடைகூற வேண்டும் கவிஞன். சிறு தவறாயினும் பெருந்தாழ்வு வரும் என்று நேரடியாகக் கூறிவிடலாம். ஆனால் அவ்வாறு கூறிவிட்டால் அது கவிதையாகாது. மேலும் பெருந்தாழ்வு என்பது ஒப்பு நோக்கல் சொல்தானே? அது எவ்வளவு என்பதைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/124&oldid=659827" இலிருந்து மீள்விக்கப்பட்டது