பக்கம்:புதிய கோணம்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 புதிய கோணம்

பெற்றுள்ளது. எனவே இந்த இரண்டு வழிகளிலும் பக்திக்கு இடமில்லை என்பது தெளிவு. வேதகால நாகரிகத்தைப் பொறுத்தமட்டில் பக்தி என்பது மிகப் பிற்பட்டுத் தோன்றினாலும், தமிழகத்தைப் பொறுத்த மட்டில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பக்தியை அறிந்து போற்றி மேற்கொண்டனர் என்று அறிய முடிகிறது. பழந்தமிழருடைய வாழ்க்கையைப் பிரதிபலிப்பவை சங்க இலக்கியங் களும் தொல்காப்பியம் என்ற இலக்கணமும் ஆகும்.

இவ்விலக்கியங்களுக்கு முற்பட்ட தொல்காப்பியம் பரம்பொருளைக் குறிக்கக் கடவுள் என்ற சொல்லையும் அதன் இலக்கணத்தைக் குறிக்க கந்தழி என்ற சொல்லையும் 6T60060TL தெய்வங்களைக் குறிக்கத் தெய்வம் என்ற சொல்லையும் பொதுப் படையாக வழங்கியமையை அறிய முடிகிறது.

அவ்வளவு பழைய காலத்தில் கடவுள், தெய்வம் என்பவற்றிடையே வேறுபாடு தெரிந்து வழிபட்ட இத்தமிழர், உபநிடத அடிப்படையில் அறிவு வழியை மேற்கொண்டதாகத் தெரியவில்லை. இதன் எதிராகக் கடவுளோடு தொடர்பு கொள்ள உணர்வு வழியையே மேற்கொண்டனர். அப்படியானால் இவர்களுடைய இறை அன்பைக் குறிக்க எந்தச் சொல்லை பக்தி என்ற சொல்லுக்குப் பதிலாகப் பயன்படுத்தினார்கள் என்பதனை அறிவது மிகவும் பொருத்தமானதாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/130&oldid=659834" இலிருந்து மீள்விக்கப்பட்டது