பக்கம்:புதிய கோணம்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்தி இயக்கமும் இலக்கியமும் 131

ஆழ்வார்கள், நாயன்மார்கள், திருமூலர் போன்ற சித்தர்கள் கண்ட பக்தி இயக்கம் ஒரு தனித்தன்மை வாய்ந்தது என்பதை அறிய முடிகிறது.

பின்னை வந்த வைணவர்கள் பக்தி, பிரபத்தி, சரணாகதி என்று வேறுபிரித்துப் பல பெயர்களைச் சூட்டினாலும் அடிப்படை இதுவே ஆகும்.

இலக்கியங்கள் மெத்த வளருகிற மேல்நாட்டில் அந்நாட்டுத் திறனாய்வாளர் அவ்விலக்கியங்களை இருவகையாகப் பிரிப்பர். இன்பம் தரும் இலக்கியம் என்றும், பயன் தரும் இலக்கியம் என்றும் இரு வகைப்படுத்துவர். ஆனால், நம்முடைய நாட்டைப்

பொறுத்தமட்டில் இன்பம் தரும் ஒரே குறிக்கோளுக்காக இலக்கியம் ஆக்கப்படுவதில்லை. வாழ்க்கைக்குப் பயன்படுவதே இலக்கியத்தின்

முக்கியக் குறிக்கோள் ஆகும். நீதி நூல்களும் வாழ்க்கைக்குப் பயன்படு கின்றன என்றாலும் நீதி நூல்களிலிருந்து இலக்கியம் மாறுபடுகின்ற இடம் ஒன்று உண்டு. நீதிநூல் திருத்துகின்ற ஆசானைப்போல் நேரிடையாக அறிவுரை வழங்கும். அதனைக் கேட்பவர் இன்பம் பெறும் நோக்கம் கொண்டவராக இருப்பின் நீதி நூல் அவரிடம் செல்லாது. இலக்கியமோவெனில் வாழ்க்கைக்குத் தேவையான அறிவுரைகளை வழங்குவதெனினும், அது ஆசான் வேலையைச் செய்கின்றது என்ற கண்டுகொள்ள முடியாமலேயே அதனைச் செய்துவிடுகிறது. இலக்கிய இன்பம், சர்க்கரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/139&oldid=659843" இலிருந்து மீள்விக்கப்பட்டது