பக்கம்:புதிய கோணம்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



13. கவிஞன் கண்ட கனவு

கவிஞர்களே கனவு காண்பவர்கள்தாம். கனவு காணாவிடில் அவர்கள் எவ்வாறு கவிஞர்களாக ஆக இயலும் கனவு காண்பது என்று கூறினவுடன் நம்மில் பலருக்கு ஒருவகையான சந்தேகம் தோன்றிவிடுகிறது. நாம்கூடப் பல சமயங்களிற் கனவு காண்கிறோம்; இன்னும் சில சந்தர்ப்பங்களிற் பகற்கனவு கூடக் காண்கிறோம். ஒருவேளை கவிஞன் கனவு என்பதும் இப்படித்தான் இருக்குமோ என்று யாரும் நினைத்துவிட வேண்டா, ஏன் என்றால் நாம் கவிஞர்கள் அல்லரே. நாம் காணும் பயனற்ற கனவுக்கும் கவிஞன் காணும் கனவுக்கும் வேறுபாடு மிகுதியும் உண்டு. நமது கனவில் ஏமாற்றந்தான் பிறக்கிறது; ஆனால், அவன் கனவில் உயிர்த்துடிப்பு உள்ள கவிதையல்லவா பிறக்கிறது? அப்படியானால் கனவு காணாமல் கவிஞனாக முடியாதா? முடியாது என்று கூறுவதே பொருத்தமுடைத்து. கவிஞன் கனவு காணாமல் இருந்தால் எதைப் பார்க்க முடியும்? நாம் அன்றாடம் காணும் இந்த உலகையும் இவ்வுலகில் உள்ள பொருள்களையுந்தானே பார்க்க முடி பார்த்துவிட்டு அவன் கவிதை எழுதப் புகுந் அக்கவிதையில் என்ன வரும்? நாம் காணும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/171&oldid=659879" இலிருந்து மீள்விக்கப்பட்டது