பக்கம்:புதிய கோணம்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமரகுருபரர் தமிழைப் பாடியது ஏன்? 179

ஊதியத்திற்காக மேற்கொண்ட தொழிலாகவே இவர்கள் பூசகர் பணியை மேற்கொண்டனர். இவர்கள் மூலமாகத்தான் தமிழகச் சிவன் கோவில்களில் ரீருத்திரம் சொல்லும் பழக்கம் ஏற்பட்டது போலும், ஆட்சியாளருடைய முழு ஆதரவையும் இந்த வைதிகர்கள் பெற்றிருந்தமையின் இவர்களை யாரும் அசைக்க முடியவில்லை.

இந்தச் சூழ்நிலையில் தமிழர்களுடைய மொழி, நாகரிகம், பண்பாடு என்பவற்றிற்கு வந்த இந்தப் பேராபத்தை எதிர்த்துப் போராட வந்தவர் திருஞான சம்பந்தர். இந்த வைதிகர்கள் நம்பிக்கை கொள்ளாத கோவில் வழிபாடு, அபிடேகம், அர்ச்சனை என்பவற்றைப் பலமுறை கூறுகிறார் அப் பெரியார். வழிபாடு வடமொழி மூலமாகத்தான் நடைபெற வேண்டும் என்ற வைதிகர்களிடையே, ஆளுடைய பிள்ளையார்,

“ அடியொன்று அடியவர் பரவத் தமிழ்ச் சொலும் வடசொலும் தான் நிழற் சேர”

(திருமுறை 17, 4)

“தென் சொல், விஞ்சமர் வடசொல், திசை மொழி, எழில் நரம்பெடுத்துத்

தொழுதெழு தொல் புகலூரில் -

(திருமுறை: 2, 92, 7)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/187&oldid=659896" இலிருந்து மீள்விக்கப்பட்டது