பக்கம்:புதிய கோணம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய கோணம் , 11

இந்நிலையில் அந்த அகங்காரம் ஒரளவு வலுப்பெறுகின்றது.

இது காரணமாகத்தான்போலும், காவிரிப்பூம் பட்டினத்தில் தாமரையில் வாழும் இலக்குமியாகவும், வேடர்கள் வாழும் காட்டில் தென்தமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்தாகவும், உலகிற்கு ஒரு திருமாமணியாகவும் காட்சியளித்த அதே பெருமாட்டி, பாண்டியன் வாயிலில்,

“அடர்த்தெழு குருதி யடங்காப் பசுந்துணிப்

பிடர்த்தலைப் பீட மேறிய மடக்கொடி’

(சிலம்பு 20. 34)

ஆகவும்,

“வெற்றிவேற் றடக்கைக் கொற்றவை’ (சிலம்பு 20, 36) ஆகவும், -

“அறுவர்க் கிளைய நங்கை யிறைவனை

ஆடல்கண் டருளிய வணங்கு” (சிலம்பு: 20, 37)

ஆகவும்,

“துருடைக் கானக முகந்த காளி’ (சிலம்பு 20, 39) ஆகவும்,

“தாருகன் பேருரங் கிழித்த பெண்’ (சிலம்பு: 20, 40)

ஆகவும் வாயிற் காப்போனுக்குக் காட்சி அளிக்கும் நிலையில் இருக்கின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/19&oldid=659899" இலிருந்து மீள்விக்கப்பட்டது