பக்கம்:புதிய கோணம்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமரகுருபரர் தமிழைப் பாடியது ஏன்? 183

இவர் கேட்கும் வரத்தை அப்படியே கேட்டவர் மணிவாசகர். ஆனால் அவர் கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனி அமையும் (திருமுறை 8) என்றல்லவா பாடிப் போனார்? அப்படி இருக்க முனியுங்கவர் பழுத்த தமிழ்ப் புலமையை ஏன் விரும்பிக் கேட்க வேண்டும்? மேலும் ஆக முதல் நாற்கவியும் பழுத்த தமிழ்ப் புலமையும் கருவில் திருவுடைய இவருக்கு ஏற்கனவே கைவந்தவையாகும். இதனைக் கேட்டுப் பெறவேண்டிய நிலையில் அவர் இல்லை.

அவ்வாறானால் இவ்வாறு இவர் பாடுவதற்குத் தகுந்த காரணம் இருத்தல் வேண்டும். இனி இவருடைய நூல் முழுவதும் காண்போமேயானால் தமிழின் சிறப்பை அடிக்கடி நினைவூட்டுதலைக் காணலாம். வடநாட்டில் வேற்று மொழி பேசும் இஸ்லாமியர் இடையே வாழ்ந்த பொழுது சகலகலா வல்லி மாலை பாடுகிறார். அதிலும்,

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர

- நாற்கவியும் பாடும் பணியில் பணித் தருள்வாய்’

என்று பாடிச் செல்பவர் திருஞானசம்பந்தனாரைப் போலவே ஒயாமல் தமிழின் பெருமை, சுவை, என்பவற்றுடன் அதன் கடவுள் தன்மையையும் சுட்டிச் செல்வது வியப்பை அளிக்காமல் இராது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/191&oldid=659901" இலிருந்து மீள்விக்கப்பட்டது