பக்கம்:புதிய கோணம்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 புதிய கோணம்

இந்த ‘மித்தாலஜி’ என்று சொல்லப்படக் கூடிய பழைய கர்ண பரம்பரைக் கதைகளில் போர் உண்டு, காதல் உண்டு, பகைமை உண்டு, உறவு உண்டு, எல்லாம் உண்டு. ஆனால் இவை அறிவினால் ஆராய்ந்து காணப்படக் கூடியவை அல்ல. உணர்வின் அடிப்படையில் காணக் கூடியவை. இன்னும் சொல்லப்போனால், ஒரு செடி வளர்வதற்கு பல் வேறு உரங்களைக் கலந்து வைக்கின்றோம். அந்த உரம் எப்பொழுது, எந்த முறையில் செய்யப்பட்டது என்பது, அந்தந்தக் காலத்திற்கும் இடத்திற்கும் பொருத்தமானதாக இருக்கலாம். ஆனால், அந்த உரங்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்துவிட்ட பிறகு, அந்தக் கலவையைப் பிரித்துப் பார்ப்பது என்பது ஒரு பொருத்தமற் செயலாகும். - ; -

இந்த உரத்திலே என்ன என்ன இருக்கின்றது, என்பதை அறிவினால் ஆராய்ந்து பார்ப்போமே ஆனால், அது ரசாயனப் பொருள்களாக முடிந்து விடும். இந்த ரசாயனப் பொருள்களை எல்லாம் ஒன்றாகச் சேர்த்தால் உரமாகி விடுவதில்லை. உரத்தில் ரசாயனக் கலவையும் உண்டு. ஆனால் ரசாயனக் கலவைகள் எல்லாம் உரங்களாவதில்லை. அதுபோல புராண, இதிகாசம் இவற்றில் எல்லாம் அறிவுக்குத் தொழில் உண்டு. ஆனால் இவை எல்லாம் அறிவின் தொழிலாக மாறுவதில்லை. இவற்றை மறவாமல் மனத்தில் பதித்துக் கொள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/202&oldid=659914" இலிருந்து மீள்விக்கப்பட்டது