பக்கம்:புதிய கோணம்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமூக செழுமைக்கான உரம் 199

கதைகள் வழங்கி வந்ததினாலேயே அவற்றை யாரும் ஆராயவில்லை. அதற்குப் பதிலாக அவற்றில் இருந்து ஏதோ ஒரு கருத்தை, அது தரும். வலிமையை எடுத்துக் கொண்டார்கள் என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது. பழையவர்கள் அறிவு குறைந்தவர்கள் அல்லர். நம்மைவிடப் பலமடங்கு அறிவுடையவர்களாக இருந்த காலத்திலும் கூட இந்தக் கதைகளை கேட்பதனாலோ அல்லது சொல்வதனாலோ அல்லது பலருக்குத் தெரிவிப்பதனாலோ, ஏதோ ஒரு நன்மை இருக்கிறது என்று கருதினார்கள். அந்தக் கதைகளில் இருந்து ஏதோ ஒரு வகையான கருத்து, அது அறிவுக்கு அப்பாற்பட்டதாகவும்கூட இருக்கலாம் ஏற்றுக் கொள்ளப்பெற்றது. ஏனென்றால் சில மருந்துகள் உடம்பில் எப்படி வேலை செய்கின்றன என்பதை மருத்துவ உலகம் இன்றும் சரியாக அறிந்து கொள்ளவில்லை; ஆனால் உடம்பில், வேலை செய்கிறது என்பது உண்மைதான்.

அது போல் இந்தப் பழங்கதைகள் சமுதாயத்தின் வளர்ச்சிக்கு, ஏன்? தனி மனிதனின் வளர்ச்சிக்கு, தனி மனித பண்பாட்டு வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியிருக்கின்றன என்பதை அறிவோமேயானால் உலக வரலாற்றோடு நாமும் ஒன்றிணைந்தவகள் ஆவோம். ஏனென்றால் முன்னே சொல்லப்பட்ட மாபெரும் நாகரிகங்கள் அனைத்தும் மித்தாலஜி’ என்று சொல்லப்படுகின்ற பழைய புராணக்கதைகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/207&oldid=659919" இலிருந்து மீள்விக்கப்பட்டது