பக்கம்:புதிய கோணம்.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 புதிய கோணம்

கடமையும் இரண்டாவது கடமையுமாகும். கலைகள் என்பவை அற்றைய நாளில் அரசர்கள் ஆதரவைப் பெற்று ஓங்கி வளர்ந்தன. எல்லோரும் இந்நாட்டு. மன்னர் ஆகிவிட்ட இந்த ஜனநாயக நாளில் மக்களின் ஆர்வம் ஒன்றே கலைக்கு ஊட்டம் தருவதாகும்; இரண்டாவது ஊட்டம் பெற வேண்டியவை அவன் கலை சிறந்த முறையில் வளர்வதற்குரிய கருவிப் பொருள்களாகிய அரங்கம் முதலியன. இவை இரண்டையும் வளர்த்தால், கலை தானே வளரும்.

எங்கோ ஓரிரண்டு கலைஞர்களைப் போற்றிப்

பாராட்டுவதால் மட்டும் நம் கடமையைச் செய்தவர்களாக ஆகிவிடமாட்டோம். மக்கள் பாராட்டையும் அன்பையும் அடிப்படையில் கொண்டு வளர்வதே $6) . இக்கலையைப்

படைக்கும் கலைஞன் ஊட்டம் பெறுவது இப் பாராட்டாலும் அன்பாலுமேயாம். சாதி, சமய, அரசியல் போராட்டங்களை எல்லாம் கடந்து நிற்பது கலை; அதைப் படைக்கும் கலைஞனும் அவ்வாறே. ‘சின்னக் கவலைகள் என்னைத் தின்னத் தகாதென்று நின்னைச் சரணடைந்தேன்’ என்று கவிஞன் பாரதி சக்தியைப் பாடினான். சின்னக் கவலைகள் நம் கலைஞர்களைத் தின்று விடாமல் நாம் அவர்களைப் போற்ற வேண்டும். இவ்வாறு செய்வதாலேயே கலையும் கலைஞனும் இணைந்து வளர முடியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/246&oldid=659965" இலிருந்து மீள்விக்கப்பட்டது