பக்கம்:புதிய கோணம்.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 புதிய கோணம்

இவ்விரண்டினையும் விடப் புதுமையானதும், பிற அவதானியர் எவரும் செய்யாததும் ஆகிய ஒன்றினைத் திரு. ஆறுமுகம் பிள்ளை அவர்கள் செய்து காட்டினார். அதுவே கொடுக்கப்பட்ட ஜாதகத்திற்குத் தொடர்பான அனைத்து வினாக் களுக்கும் விடை தருவதாம்.

எவரோ ஒருவருடைய ராசிச் சக்கரம் மட்டும் (ஜாதகம்) அவதானி ஆறுமுகம்பிள்ளை அவர்களிடம் தரப்பெறும். சில விநாடிகளில் அது திரும்பப் பெறும். அச்சக்கரத்திற்குரியார் பிறந்த ஆண்டு மாதம், இது என்று அவதானியார் அறிவிப்பார்.

நடப்பு ராசிச் சக்கரத்தைக் கொண்டு அந்த ராசிச் சக்கரத்தை ஒப்பிட்டு, குரு சனி இருக்கும் வீட்டைக் கணக்கிட்டு ஒரளவு கூறலாம் என்றாலும் அதுவும் அரிது.

12 ஆண்டுகட்கு ஒருமுறை 12 ராசிகளையும் சுற்றி வரும் குரு, 30 ஆண்டுகட்கு ஒரு முறை ராசிச் சக்கரத்தில் ஒரு சுற்று முடிக்கும் சனி, ஆக இவ்விரு கிரகங்களின் இயக்கம் கொண்டு ராசிச் சக்கரத்துக்கு உடையார் வயது கணக்கிடலாம். எனினும் அதுவும் கடினமானதே. குரு இருக்கும் இடத்தை வைத்து உத்தேசமாக எந்த ஆண்டு என்று கூறலாம், சூரியன் அமைந்துள்ள இடம் கொண்டு எந்த மாதம் என்று கூறலாம் எனினும் அவர்க்கு இறைவன் அருளால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/260&oldid=659983" இலிருந்து மீள்விக்கப்பட்டது