பக்கம்:புதிய கோணம்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 புதிய கோணம்

புத்ததேவன் நன்கு முற்றிவிளைந்த கொப்பரைத் தேங்காயாக இளமையிலேயே ஆகிவிட்டான். எனவே, சுத்தோதனன் அவனை மகிழ்ச்சியிலும் இன்பத்திலும் வாழச்செய்த முயற்சிகள் அனைத்திலும் தோல்வியே அடைந்தான். இன்பத்தின் இடையே வாழ்ந்த புத்த தேவன் துன்பத்தையே கண்டான். பகவத்கீதை கூறுவதும் இதைத்தானே. ‘கூட்டத்தினிடையே தனிமையையும், தனிமையில் கூட்டத்தையும் காண்பவனே ஸ்திதப் பிரக்ஞன் என்று கீதை கூறுகிறது.

பல நாட்கள் ஊண், உறக்கம் அற்றுப் போதி மரத்தடியில் இருந்தமையால் மட்டும் புத்த தேவனுக்கு உள்ளொளி பிறந்துவிடவில்லை. ஊண், உறக்கம் இன்றி அரசமரத்தடியில் நாள் கணக்கில் இல்லாமல் ஆண்டுக் கணக்கில் கிடக்கிறவர்களும் உண்டு. எனினும் அனைவரும் புத்ததேவர்களாக ஆகிவிடவில்லை. ஆதலால், அவன் இதனை அம்மரத்தடியில் பெற்றான் என்பது பொருந்தாக் கூற்றே. இளமைதொட்டே இன்பத்திலும் துன்பத்தைக் கண்ட அவனுடைய மனநிலை பெரிய உண்மையைக் காண்பதற்குத் தயாராகிவிட்டது.

இதன் முதற்படி யாது? வாழ்வின் பயனாக அப் பெருமகன் கண்டவை முன்னர்க்கூறிய நான்கு உண்மைகளாக இருப்பினும், அதன் அடிப்படையான மனநிலையும், வாழ்வுமுறையும் யாவை? என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/30&oldid=659992" இலிருந்து மீள்விக்கப்பட்டது