பக்கம்:புதிய கோணம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 புதிய கோணம்

தீநெறியாகிய கடும்பகையை எவ்வாறு போக்கினான் புத்ததேவன்? ஒன்றுஞ் செய்யாமல் நாம் LOITU-68000T வென்றுவிட்டோமே, இனி நமக்கென்ன என்று கருதி வாளா இருந்துவிட்டானா? இல்லை. அக்கடும் பகையைப் போக்க ஒரு வழியை மேற்கொண்டான். அவ்வழி யாது? அதுவே மூன்றாம் அடியில் குறிக்கப்படும் பிறர்க்கு அறம் முயலுதலாம்.

சுத்தோதனன் மகனாகப் பிறந்த சித்தார்த்தன் ‘மாரனை வென்றபொழுது புத்தனாக ஆகவில்லை. மாரனை வெல்லுதல் பெரிய காரியமே ஆயினும் அதனால் அவன் மகாத்மாவாக ஆகிவிடவில்லை. பின்னர் எப்பொழுது புத்தனாக, மகாத்மாவாக ஆயினான் எப்பொழுது பிறர்க்காக அறத்தை முயன்று செய்தானோ அப்பொழுதுதான் அவன் மகாத்மா ஆயினான். இதனை மனத்துட் கொண்டே ஆசிரியர் பிறர்க்கு அறம் முயலும் பெரியோய் என்று குறிப்பிடுகிறார்.

பிறர்க்கு அறம் முயலுதலாவது யாது? பிறர்க்கு அறத்தினை அறிவுறுத்துவதும் அவர் பொருட்டாக அறத்தினை முயன்று செய்தலுமாம். கிறிஸ்துவர்கள் ‘மானிடர் பொருட்டாக ஏசு சிலுவையில் மாண்டு அவர்கள் பாவங்களைப் போக்கினார் என்று

கூறுவதன் கருத்து யாது?

‘பிறர் பழியும் தம் பழியும் நானுவார் நானுக் குறைபதி என்னும் உலகு” - (குறள் 1015)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/34&oldid=659996" இலிருந்து மீள்விக்கப்பட்டது