பக்கம்:புதிய கோணம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 புதிய கோணம்

இன்மை, வெறுப்புணர்ச்சி, காழ்ப்பு ஆகியவையும் வளர்ந்துள்ளன. வளர்ந்துள்ளன என்று கூறும் பொழுது, காலத்திற்கேற்ப ஓரளவு வளர்ந்து இருக்குமாயின் அதனைப் பெரிதாகப் பாராட்ட மாட்டோம். ஆனால் இன்றைய மனிதனை மூழ்கடிக்கும் அளவிற்கு அல்லவா அவை வளர்ந்து விட்டன.

அன்றாடம் செய்தித்தாள்களைப் படிக்கின்றவர் களும், உலகைச் சுற்றி வருகின்றவர்களும் ஒன்றைக் கண்டு வியப்பு அடையாமல் இருக்கமுடியாது. ஒரு புறம் மனிதனின் வாழ்க்கையை வளம்படுத்தும்

வசதிகள் மலைபோல் வளர்ந்துள்ளன. அதன் எதிர்ப்புறம் அவனையே துயரச் சூழலில் அழுத்திவிடும் பிரச்சனைகளும் மலைபோல்

வளர்ந்துள்ளன. இவை இரண்டின் இடையே அகப்பட்டு இன்றைய மனிதன், செல்லும் திசை அறியாது தத்தளிக்கின்றான். எவற்றை வசதிகள் என்று நம்பி வளர்த்தானோ, எவற்றால் தனக்கு ஒய்வும், அமைதியும் கிட்டும் என்று கருதினானோ அவையே அவனை மூழ்கடிக்கும் கருவியாக அமைந்துவிட்டதைக் கண்டு இன்றைய மனிதன் திகிலடைகிறான்.

மனிதனுக்கு மிகஇன்றியமையாது வேண்டப் படுவது முழு வளர்ச்சிகளாகும். குத்துச்சண்டை போடுகின்றவனுக்கு அதிகம் பயன்படுவது கைகளே என்றாலும், கையை மட்டும் வலுவுடையதாய்ச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/42&oldid=660007" இலிருந்து மீள்விக்கப்பட்டது