பக்கம்:புதிய கோணம்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. புலியார் நட்பு

ஒரு நாட்டை ஆள்பவர்கட்கு இன்றியமையாது வேண்டப்படுவது யாது? இவ்வினாவிற்குப் பலரும் பலவாறு விடை கூறுவர். ஆனால், அவர்களுடைய விடைகள் அனைத்தையும் கூட்டி ஒரு சொல்லில் கூறவேண்டுமாயினும் கூறலாம். ஆட்சியாளருக்கு இன்றியமையாது வேண்டப்படுவது ஒரு குறிக்கோள்’. குறிக்கோள் இல்லாதவனுடைய வாழ்க்கை சிறப்படையாது. விலங்குகளும், பிறந்து, உண்டு, வாழ்ந்து, முடிவில் இறக்கின்றன. மனிதனும் இவ்வாறே இருந்துவிடுவானாகில் இருவருக்கும் வேறுபாடு இல்லையாய் விடும். விலங்கினத்திலிருந்து மனிதன் பிரிக்கப்படுவதற்கு ஒரு சிறந்த காரணம் அவன் வாழ்க்கையில் மேற்கொள்ளும் குறிக்கோள் தான். குறிக்கோள் இல்லாதவனுடைய வாழ்க்கை உப்புச் சப்பு இல்லாமல் ஏதோ நடைபெறுகிறது என்று கூறும் முறையில்தான் இருக்கும். தனிப்பட்ட மனிதன் வாழ்வுக்கே குறிக்கோள் தேவை என்றால் பலருடைய வாழ்க்கையை வழிகாட்டி நடத்தும் நாடாள்வாருக்கு இது தேவை என்று கூறினால் அதில் வியப்படைய ஒன்றும் இல்லை. இன்று நாட்டை ஆள்பவர்கள் எத்துணைப் பெரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/49&oldid=660014" இலிருந்து மீள்விக்கப்பட்டது