பக்கம்:புதிய கோணம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியார் நட்பு - 47

மனிதனுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். அன்று உண்ணாத புலி மறுநாள் புறப்பட்டு யானையை வலப்புறம் விழுமாறு அடித்து அன்றுதான் உண்டதாம். எனவே, கொள்கையே பெரிதென்று

வாழும் மனிதர்கள் புலியின் இனத்தைச் சேர்ந்தவர்கள். பிற விலங்குகள் அடித்துக் கொன்ற உணவைப் புலி உண்பதில்லை. அதுபோல்

இவர்களும் பிறருடைய முயற்சியில் வந்த பொருளைத் தாம் அனுபவிப்பதில்லை. தன்னால் அடிக்கப்பட்ட விலங்கு இடப்புறம் வீழ்ந்துவிடின் புலி அதனை உண்ணாதாம். அதேபோல இவர்கள் அடையும் ஊதியம் தவறான வழியில் வந்திருப்பின் இவர்கள் அதனை ஏற்றுக் கொள்வதில்லை. புலி பசியைப் பொறுத்துக் கொள்வதுபோல் இவர்களும் வாழ்க்கையில் உண்டாகும் எத்தகைய துன்பத்தையும் தம் கொள்கைக்காகப் பொறுத்துக் கொள்வர். புலி முயற்சியால் கொன்ற விலங்கைத் தான் உண்டுவிட்டு எஞ்சியதை நாளைக்கு வேண்டுமே என்று வைத்துக் கொள்வதில்லை. அந்த எஞ்சிய உணவைப் பிற விலங்குகள் பல உண்டு உயிர் வாழும். அதேபோல இந்தப் பெரியவர்கள் தாம் செய்த முயற்சியால் பெற்ற ஊதியத்தைத் தமக்கே வேண்டும் என்று வைத்துக் கொள்வதுமில்லை. தங்கள் தேவை தீர்ந்தவுடன் எஞ்சியதைப் பிறருக்கு வரையாமல் வழங்குவர். இத்தகைய புலிக் கூட்டித்தாருடன் நட்பு வேண்டும் என்று கூறுகிறான் வாழ்க்கையில் பெரிய குறிக்கோள் வேண்டும் என்று கருதும் அப்பழந்தமிழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/55&oldid=660021" இலிருந்து மீள்விக்கப்பட்டது