பக்கம்:புதிய கோணம்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

iv

பட்டவர்களுக்கு இக்கட்டுரைகள் புதுமையாக இருக்கும். அ.ச.தான் இவற்றை எழுதினானா? என்ற ஐயம் கூட சிலர் மனத்தில் தோன்றலாம். உண்மையில் 40 ஆண்டுகளுக்கு முன்னர் எனது எழுத்து நடை எப்படியிருந்தது என்பதற்கு இவை அடையாளம் ஆகும்.

கவிதைப் பண்பு என்ற கட்டுரை திருக்குறளை ஓர் இலக்கியமாகக் கருதி பார்க்கின்ற பார்வையாகும். வள்ளுவன் கண்ட இன்பம் என்னும் கட்டுரையும் குறள் பற்றியதேயாகும். எனினும் இவற்றுள் முதற்கட்டுரை பல்லாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது. இரண்டாம் கட்டுரை அண்மையில் எழுதப்பட்டதாகும்.

சான்றோர் சிந்தனை என்ற கட்டுரை சென்னை வானொலியில் அண்மையில் பேசப்பட்டதாகும்.

மேலே கூறப்பெற்றவை போக எஞ்சியுள்ள கட்டுரைகள் அனைத்தும் சென்ற 10 ஆண்டுகளுக்குள் எழுதப்பெற்றவையாகும். மிக அண்மையில் மூன்று மாதங்களுக்கு முன்னர் எழுதப்பெற்றது பாரதி-சித்தன் என்ற கட்டுரையாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/6&oldid=1405057" இலிருந்து மீள்விக்கப்பட்டது