பக்கம்:புதிய கோணம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 புதிய கோணம்

தன்னுடைய மகனை அழைத்து, ஒரு வெள்ளை வேட்டியைச் சுற்றிக் கட்டிவிட்டு, பறந்து கிடக்கிற அவனுடைய தலையை TT@TE வாரி நீவிவிட்டு, “ஒருமகனல்ல தில்லோள் - இந்த ஒரு மகனை அல்லாது வேறு பிள்ளை இல்லாதவளாகிய பெருமாட்டி வேலைக் கையிலே கொடுத்து, போருக்குப் போ என்று சொன்னாளாம். இது தமிழ் மூதாட்டியின் வீரத்தை எடுத்துக்காட்டுவதாக நம்மில் பலரும் இன்று நினைக்கிறோம். உண்மை தான், மறுப்பதற்கில்லை. அவர்களுடைய வீர மனோநிலையைக் காட்டுகிறது. ஆனால் சமுதாய அடிப்படையில், சமுதாயப் பண்பாட்டில் இதைப் பெரிதுபடுத்தினார்களே என்று நினைக்கும்போது, இந்த நாட்டின் பழைய வரலாறு எந்த அளவுக்கு நமக்கு இன்று பாடமாகுமென்று சிந்திக்கத்தான் வேண்டியிருக்கிறது. பாரியைப் பொறுத்த அளவில், அந்தப் பிரச்சினை மிகப் பெரிதாக அமைந்து விடுகிறது அவனுடைய வாழ்க்கையிலே. அவனுடைய வாழ்வைப்பற்றி நாம் ஒன்றும் அறிந்து கொள்ள முடியாவிட்டாலும், 300 ஊர்களையுடைய அவனை எதிர்த்து சேர, சோழ, பாண்டியர்கள் மூவரும் போரிட்டார்களென்று கேள்விப் படும்போது சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை. மாபெரும் சாம்ராஜ்யத்தை ஆளுகின்ற மன்னர்கள், 300 ஊர்களைக் கொண்ட ஒரு சிற்றரசனைப் போரிட்டு, முற்றுகையிட்டு, பலகாலம் காத்திருந் தார்கள் அவனைத் தோற்கடிப்பதற்கு என்றால், எந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/66&oldid=660033" இலிருந்து மீள்விக்கப்பட்டது