பக்கம்:புதிய கோணம்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 புதிய கோணம்

“ஈதல் இசைபட வாழ்தல் அது அல்லது)

ஊதியம் இல்லை உயிர்க்கு” (குறள்-23)

என்று வள்ளுவப் பேராசான் கூறினான். ஆனால், ஈதல் என்று வரும்போது, அது இசைக்குக் காரணமாக இருக்கிறதாகச் சிலர் நினைப்பார்கள். கொடுப்பதினாலே இம்மையிலே இசை கிடைக்கிறது; பிறகு புகழ் கிடைக்கிறது; பிறகு அதனால் அறம் வளர்கிறதென்ற நினைவோடு பலரும் செய்திருப்பதாகத் தெரிகிறது. இந்த நினைவு தமிழ் மக்களிடையே ஊறிக்கிடந்த காரணத்தால்தான், உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் ஆய் அண்டிரன் பற்றிப் பாடும்போது,

‘இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்எனும் அறிவிலை வணிகன் ஆய்அலன்-’ (புறம்: 134)

என்று பாடினார். இந்தப் பிறப்பிலே அறம் செய்தால் அது மறு பிறப்பிலே ஓரிடம் வாங்குவதற்கு உதவியாக இருக்குமென்று நினைத்து அறத்தை விலை பேசுபவன் அல்லன் ஆய் என்று கூறியதால்,

இத்தகைய எண்ணம் தமிழ் நாட்டிலே இருந்திருக்கிறதென்று நினைக்க வேண்டியிருக்கிறது. அப்படியானால் உண்மையான வள்ளன்மை

உடையவர்கள்-ஆய் போன்ற வள்ளல்கள், பாரியைப் போன்ற வள்ளல்கள் - நிச்சயமாக அற அடிப்படை என்று நினைத்துக்கூடச் செய்யவில்லை. பின் ஏன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/70&oldid=660038" இலிருந்து மீள்விக்கப்பட்டது