பக்கம்:புதிய கோணம்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலரும் பாரியும் 63

இவர்களுடைய கொடை நடைபெற்றது? புலவரே பதில் சொல்கிறார்.

“ஆங்குப்பட்டன்று அவன் கை வண்மையே”

கொடுப்பது என்பது அவனுக்கு ஒரு பழக்கம். நடப்பது, உண்பது என்பது எப்படி நம்மையும் அறியாமல், இயல்பாக நடைபெறுகின்றன என்று சொல்லுகிறோமே அப்படி ஒரு பழக்கமாகப் படிந்து விட்டதோ அதுபோல கொடுப்பது என்பது ஒரு பழக்கமாக அமைந்துவிட்டதென்று சொல்வது தான் உண்மையான விடையாகும். அப்படியானால் புகழுக்காகக்கூட இவர்கள் செய்யவில்லையா, அதைப் பெரிதாகப் பாராட்டின்ார்களே தமிழர்கள்

“மன்னாஉலகத்து மன்னுதல் குறித்தோர் தம்

புகழ்-” (புறம் 165)

என்று புறப்பாடல் பேசுகிறது. நிலைபேறு இல்லாத இந்த உலகத்தில், நிலைபெறுவதற்குரிய காரியங் களைச் செய்து புகழைத் தேட வேண்டும். அந்த அடிப்படையில் ஒருவேளை பாரி இந்த மாபெரும் செயலை மேற்கொண்டிருப்பானா என்றால் நிச்சயமாக இல்லை என்ற முடிவுக்கு வர வேண்டி இருக்கிறது. இத்தனையையும் சேர்த்துச் சிந்திக்கும் போது, செயற்கரிய செயலை அவன் புகழ்பெறக் கருதிச் செய்யவில்லை; மறு பிறப்பில் வீடுபேறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/71&oldid=660039" இலிருந்து மீள்விக்கப்பட்டது