பக்கம்:புதிய கோணம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலரும் பாரியும் 67

இதைவிட மிக இன்றியமையாத ஒரு அற்புதமான அடைமொழியைத் தருகின்றார். ‘கவலையில் நெஞ்சில்” கவலையில்லாத நெஞ்சினை உடையவர் என்று பெருங்குன்றுார்கிழார் பாடவேண்டுமானால் கபிலருடைய கவிதை மட்டுமல்ல, அவருடைய வாழ்வு முழுவதும் ஒப்பற்றதாக அமைந்திருக்கிறதென்பதை அறிய முடிகிறது. இசையுடன் வாழ்ந்து, பின்னர் புகழும் பெற்றவர். பொருந்திலிளங்கீரனார் என்ற புலவர் பெருமகன்,

‘செறுத்த செய்யுட் செய்செந் நாவின் x

வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்’ (புறம்: 53)

என்று செறிவான பாடல்களை, அற்புதமாகத் தன்னுடைய கேள்வி ஞானத்தாலும், கல்வியாலும் பாடக்கூடிய புலவன் என்று பேசுகிறான். அதற்கு அடுத்த அடியில், ஒரு வரலாற்று முக்கியத்துவம் தெரிகிறது.

‘- விளங்குட்கழ்க் கபிலன்

இன்றுள ணுயி னன்றும னென்ற...’ (புறம்: 53)

என்று சொல்வதனால், இந்தப் புலவருடைய காலத்தில் கபிலர் இல்லை என்று நினைக்க வேண்டியிருக்கிறது. இனி, செந்நாக் கபிலன்’

என்றும் பேசுகிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/75&oldid=660043" இலிருந்து மீள்விக்கப்பட்டது