பக்கம்:புதிய கோணம்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலரும் பாரியும் 81

இங்கே நின்று பார்த்தாலும் எங்கள் மலை தெரியும்; கொஞ்ச தூரம் சென்று பார்த்தாலும் எங்கள் மலை தெரியும் என்று குழந்தை மனப்பான்மையிலே பாடுகிறார் கபிலர் பெருமான்.

ஒரு புறம் அருவியின் ஒழுகல் இரைச்சலாம்; மறுபுறம் பாணர்களின் பிச்சைப் பாத்திரத்தில் மதுவை ஊற்றிக்கொண்டே இருக்கிறார்களாம். என்ன சிறப்பு? ஊற்றுகிறவனும் இது மதுவாயிற்றே, கீழே சிந்தக் கூடாதென்று கவலைப்படவில்லையாம்; மற்றொரு புறம் அதை வாங்குகிறவனும் அது பற்றிக் கவலைப்படவில்லையாம். ஆகவே அவன் பாத்திரத்திலே இருந்து வழிந்து ஓடுகிற மது, சின்னச் சின்னக் கல்லை உருட்டிக்கொண்டு மலை வழியாகக் கீழே இறங்குகிறதாம். இதோ பாடுகிறார், கபிலர் பெருமான்.

“ஒருசா ரருவி யார்ப்ப வொருசார்

பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார் வாக்க வுக்க தேக்கட் டேறல் கல்லலைத் தொழுகு மன்னே பல்வேல்’ (புறம்: H5).

அந்தப் பாடலைப் படிக்கும்போதே, நம்முடைய காதில், கல்லிழைத்து ஒடுகின்ற மதுவின் ஒசையைக் கேட்பதுபோல் இல்லையா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/89&oldid=660059" இலிருந்து மீள்விக்கப்பட்டது