பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 சாலையைக் கடந்து, மறுபக்கம் செல்லவேண்டி யிருந்தால் சாலையைக் கடப்பதற்கென்று, தடம் போடப்பட்டிருக்கும் இடங்களில் மட்டுமே ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்குச் செல்வார்கள். இத்தகைய கட்டுப்பாடு எவரையும் கவரும் என்னே யும் கவர்ந்தது. ஒழுங்கும் கட்டுப்பாடும் ஜெர்மானிய மக்களின் குருதியில் கலந்து விட்டன என்பதை முன்னர் படித்ததுண்டு. இம்முறை, கிழக்கு ஜெர்மனியில் கேரில் கண்டு உணர்ந்தேன். வழி கெடுகிலும் பையன்களும் பெண்களும் சுற்றிக் கொண்டோ விளையாடிக் கொண்டோ இருப்பதைக் கண்ட கான், 'உங்கள் காட்டில் குழந்தைகள் ஏராளமோ?" என்று கேட்டு வைத்தேன். தேவையில்லாத, திங்கான, உயிர்க் கொலை மிகுந்த, சென்ற இரண்டாவது உலகப் போரில், பல நாடுகளிலும் மக்கட் சேதம் அதிகம். ஜெர்மானி யர் உயிரிழப்பும் ஏராளம். எண்பது இலட்சம் ஜெர் மானியர் மாண்டனர். நாடோ நாசமாகிவிட்டது. தொழிற்சாலைகளோ, தரைமட்டமாகி விட்டன. பயிரோ, பாழான பூமியில், புதிதாகத் தொடங்க வேண்டியதாயிற்று. "எவ்வளவோ உறுதியோடு, கடமையுனர் வோடு, தணியாத ஆர்வத்தோடு, பாடுபட்டு, எங் கள் காட்டை, உலகத்தின் வளர்ந்த நாடுகளில் ஒன்ருக மாற்றியுள்ளோம். | قی