பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனர். கேஷர் என்னை ஒரு பக்கமாக கிற்க வைத்து விட்டு, கிர்வாகியிடம் விரைந்து சென்ருர். அவரிடம் அவர்களுடைய ஜெர்மன் மொழியில், ஏதோ பேசினர். கூடத்திற்கு அடுத்துள்ள சிறு அறை ஒன்றில், மேசை காற்காலிகளும், சாப் பாட்டு த் தட்டுகளும், கரண்டி, முட்கரண்டி ஆகியவையும் அமைக்கப்பட்டிருந்தன. அங்கே அழைத்துப் போய் அமரச் செய்தார். அழைப்பின் பேரில் வெளிநாடுகளிலிருந்து வந்துள்ள தனி விருந்தாளிகளைக் காக்க வைக்காமல் உணவு பரிமாற அந்த ஏற்பாடாம். வெளிநாடுகளில், என்னை அழைப்பவர்களுக்கு எப்போதும், என்னுல் தொல்லை அதிகம். கான் மரக் கறி உணவைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டுப் பழகாதவன். மேனுட்டு ஒட்டல்களில், தனி மரக் கறி உணவு பெறுவதற்கு முயன்று ஏற்பாடு செய்ய வேண்டும். என்னுடைய உணவுப் போக்கைத் தெரிந்து கொண்ட கேஷர், பரிமாறுகிறவரை அழைத்து, l இந்த இந்திய நண்பருக்கு வெறும் மரக்கறி உணவு கொண்டு வர வேண்டும். என்ன மரக்க: பதார்த்தம் கொடுக்க முடியும் ' என்று கேட்டார். அப்படியே எற்பாடு செய்து விடுகிறேன். வேக வைத்த காய்கறிகளின் மேல், அவித்த முட் டைகளைத் துண்டு போட்டுத் துவிக் கொண்டு வரலாமா ? என்று ஆர்வத்தோடு கேட்டார்.