பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 "இங்கே யாரும் தண்ணிர் குடிப்பதில்லை. பழச்சாறு அல்லது மினரல் நீர் கொண்டு வரச் சொல்லவா ?' 'சாப்பாட்டிற்கு முன் ஒரு டம்ளர் பழச்சாறு சாப்பாட்டின் போது, மினரல் நீர் இரண்டையும் வரவழையுங்கள். நான் மது அருந்தவில்லையே என்று, நீங்கள் மது அருந்துவதைக் கைவிட்டு விட வேண்டாம். உங்களுக்கு எந்த வகை பிடிக்குமோ அதை வாங்கிக் குடிக்கலாம். அதனுல் எனக்கு ஒன்றும் சங்கடமில்லை. உங்கள் தட்டிலி ருக்கப் போகும் மாமிசமே குமட்டப் போவதில்லை. மதுவா குமட்டும் ? வேண்டியதை வாங்கிக் குடி யுங்கள்' என்றேன். 'பீர், எனக்கு பிடித்தது. ஆனல் இப்போது குடிக்கமாட்டேன். என்ருர். 'பகலில் குடிப்பதில்லையா ? என்று வினவி னேன். பகலாக இருந்தாலும் குடிப்பேன். சாப்பாடு முடிந்ததும், நானே காரை ஒட்ட வேண்டுமே ; அதனுல் குடிக்க மாட்டேன்." == போதை ஏருத அளவு குடித்துக் கொள்ள லாமே என்று யோசனை கூறினேன். பத்து பிள்ளை பெற்றவளுக்கு மலடி மருத்து வம் சொல்லுவது போல் இருக்கிறதா சரி சிரிக் காதீர்கள். கேஷரின் பதிலைக் கேளுங்கள்.