பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

கிழக்கு ஜெர்மனியில் மின்சார வசதி அதிக மோ? காட்டுப்புறங்களில் கூட மின்சார வசதி உண்டோ?'
ெ முக்கு ஜெர்மனியில் எல்லா ஊர்களுக்கும்சிற்றுார்களுக்குக் கூட மின்சாரம் உண்டு. மின்சா ரம் இல்லாத ஊரே இல்லை.”

இதைக் கேட்டதும், இந்தியா முழுவதிலும் இப்போதுள்ள மின்சாரத் தட்டுப்பாடு, என் கினை விற்கு வந்தது. அந்த காட்டில் அத்தகைய தட்டுப் பாடே இல்லையென்று தெரிந்து கொண்டு பொரு மைப்பட்டேன். கிழக்கு ஜெர்மனி பெரும்பாலும் அனல் மின்சாரத்தையே நம்பியுள்ளது. எல்லாக் காலத்திலும், போதிய அளவு, அனல் மின்சா ரத்தை உற்பத்தி செய்வதற்கு வேண்டிய பழுப்பு நிலக்கரி அங்காட்டில் கிடைக்கிறதாம். அதைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்வதால், பருவ மழை பொய்ப்பதால் ஏற்படும் நீர் மின்சாரத் தட் டுப்பாடு, அங்காட்டில் ஏற்படுவதில்லை. கம் நாட்டில் பருவத்தில் மட்டும் மழை. அப் பருவம் தவறிவிட்டால், பிறகு மழை வராது. கிழக்கு ஜெர்மனியில் மழைப் பருவம் எப் போது என்று விசாரித்தேன். பனிக்காலம் தவிர மற்ற எல்லா திங்களிலும் அப்போதைக்கப்போது மழை பெய்யுமாம். இதை நான் நேரடியாக அனு பவித்தேன். ஜெர்மனியில் இருந்த ஒரு வாரத்தில்வசந்தகாலத்தி ல்-மூன்று காட்கள் திடீரென மழை பெய்தது.