பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 தரப்பிலும் பலத்த கைதட்டலைக் கண்டு மகிழ்க் தேன். இலங்கையின் சார்பில் வந்திருந்த திரு பெரைரா, அடுத்துப் பேசினர். இலங்கையில் பஞ் சாலை நிறுவ புதிய ஜெர்மனி உதவியதைக் குறிப் பிட்டு கன்றி கூறினர். நீங்கள் எவ்வளவுக்கெவ்வ ளவு பொருளாதாரத்தில் வளர்கிறீர்களோ அந்த அளவிற்கு பிற நாடுகளுக்கு உதவி புரிகிறிர்கள். ஆகவே உங்கள் வளர்ச்சி, எங்கள் மகிழ்ச்சி. புதிய ஜெர்மனியர்கள் மெய்யான நண்பர்களாக விளங்குவதாகக் கூறி, இலங்கையின் சார்பில் வாழ்த்தினைத் தெரிவித்தார். செவிக்குணவில்லாத போது வயிற்றுக்கும் சிறிது ஈயப்படுமல்லவா? இரண்டு மணி நேர செவியுணவுக்குப் பின், பகல் உணவிற்குச் சென்ருேம். திரு. வெண்டல் அளித்த விருக்தினை உண்ட மகிழ்ச்சியோடு மீண் டும், தகவல் விருந்திற்குப் புறப்பட்டோம். எங்கே? திரு. வெண்டலின் அலுவலகத்திற்கா? இல்லை பின் எங்கே? ஆசிரியர் இல்லத்திற்குச் சென்ருேம். அது என்ன? சிறிய குடிலா? இல்லை. பெரிய பல மாடிக் கட்டடம். பெர்லின் ஆசிரியச் சங்கத்திற்கு அந்த பல மாடிக் கட்டடம் சொந்தம். அதில் மையக் கல்வி