பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 எஇன்றைய நிலையை அடைவதற்கு காங்கள் பதினைந்து ஆண்டுகள் பாடுபட வேண்டியதா யிற்று' என்று பதிலுரைத்தார். இந்தியா விடுதலை பெற்று இருபத்தைந்து ஆண்டுகளைக் கடந்த பிறகும் எல்லோர்க்கும் தொடக்கக் கல்வி-ஐந்தாண்டு கல்வி-என்னும் கிலைக்கு அருகில் கூட வரவில்லையே என்பது எங் கள் கெஞ்சில் உறுத்திற்று. எங்களுக்குள் கீழ்க் கண்ணுல் பேசிக் கொண்டோம். அடுத்த இமைப் பொழுது, சமாளித்துக் கொண்டு, மற்ருெரு கேள் வியை விசிைேம். 'அவ்வளவு காலம்-பதினைந்து ஆண்டு காலம் பாடுபட வேண்டியதாயிற்றே இடையூறு கள் பலவோ?’ என்பது எங்கள் கேள்வி. ஆம்; பெற்ருேர், பொதுமக்கள் மனப்போக்கு முதல் இடையூருக இருந்தது. பாட்டாளிகளின் குழந்தைகளுக்கு படிப்பு வராது. உயர்ந்த கல்வி பெறுவதற்கு உரியவர்கள் மேட்டுக் குடிகளே. தலைமுறை தலைமுறையாக இத்தகைய உணர்ச்சி யில் வளர்ந்து வந்த பொதுமக்கள், எல்லோருக் கும் கல்வி என்பதில் கம்பிக்கை கொள்ள காளா யிற்று. வளர்ச்சிக்குத் தடையான அம் மனப் போக்கை மாற்றுவதில் முனைந்தோம். பெருமளவு வெற்றி; ஆயினும் இம் முயற்சி மேலும் தொடர வேண்டியதாக உள்ளது.