பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 () கிராமச்சாலேயொன்று, வலப்புறத்திலிருந்து வங்து, விரைவுச் சாலையில் சேரும் இடத்திற்கு வங்தோம். பொடியன்கள் ஐந்து பேர்களைக் கண்டேன். ஒவ்வொருவரும் தனித்தனி 'சைக்கிளில் சவாரி செய்து கொண்டு விரைவுச்சாலையை நெருங்கினர். சங்திப்பிற்கு வந்ததும், சட்டென்று நுழைந்துவிட வில்லை. சந்திப்பில், தங்கள் வீதியில் கின்றனர். விளையாட்டுப்பிள்ளைத் தனமாக படாரென்று விரைவுச் சாலையில் புகுந்துவிடாத பொறுப்புணர்ச் சியும் ஒழுங்கும் என் கருத்தைக் கவர்ந்தன. இருமருங்கிலும் செழித்துப் பயிராகியுள்ள கோதுமை வயல்களையும் உருளேக்கிழக்கு தோட் டங்களையும் பார்த்து ரசித்தபடியே, இரண்டு மூன்று சிற்றுார்களேத் தாண்டினுேம். ஒவ்வோர் சிற்றுாரிலும் சைக்கிளில் சுற்றும் சிறுவர் சிறுமி களைக் கண்டோம். முதல் ஊரில் பார்த்ததுபோல, மற்ற ஊர் வாண்டுக்ளும் பொறுப்போடு கடந்து கொண்டன. காங்கள் சென்ற தொண்ணுாறு கிலோ மீட்டர் தொலைவிலும், ஒரிடத்திலும், சட் டென்று புகுந்துவிட்ட சைக்கிளுக்காக, காரை திடீர் கிறுத்தம் செய்ய நேரிடவில்லை. விரைவுச் சாலையில் ஒரத்தில் சைக்கிள் விடு வோருக்கென்று தனிப்பாதை உண்டு. அதை விட்டு, கார் பாதைக்குள் புகுந்து திண்டாடுப வனேக் காணவில்லை.