பக்கம்:புதிய தமிழகம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க காலத்தில் தமிழ் வளர்ந்த முறை

மூவகைத்தமிழ்

மனிதன் உரை நடையிலும் செய்யுள் நடையிலும் செய்திகளை அறிகின்றன். இவ்விரண்டு இயல் எனப் படும். பண் இசைத்துத் தாள வரையறை செய்து பாடப் படுவதும் ஒரு வகை. அது இசை எனப்படும். இயலும் இசையும் கலந்து காண்பார் கண்களுக்கும் கருத்துக்கும் விருந்தளிக்க வல்லதாய் நடித்துக் காட்டப் படுவது நாட கம் எனப் படும். இம் மூன்றும் ஒவ்வொரு மொழியிலும் அமைந்துள்ளன. ஆல்ை ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மொழியை இங்கனம் மூன்று பிரிவுகளாகப் பிரித்து வளர்த்த பெருமை தமிழ் ஒன்றுக்கே உரியது என்பது தவருகாது. அப் பண்டைக்காலத்தில் தமிழ்-இயற்றமிழ், இசைத் தமிழ், நாட கத்தமிழ் என மூன்று பிரிவுகளாக வகுக்கப் பட்டிருந் தது. இயற்றமிழில் வல்லவர் புலவர் என்றும், இசைத் தமிழில் வல்லவர் பாணர், பாடினியர் என்றும் நாடகத் தமிழில் புலமை பெற்றவர் கூத்தர், கூத்தியர் என்றும் பெயர் பெற்றிருந்தனர்.

முத்தமிழ்ப் பயிற்சி

இக்காலத்தில் இருத்தலேப் போலச் சங்க காலத் தில் கல்லூரிகள் இருந்தன என்று துணிந்து கூறுதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/34&oldid=641906" இலிருந்து மீள்விக்கப்பட்டது