பக்கம்:புதிய தமிழகம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 புதிய தமிழகம்

அன்பு, அருள் முதலிய நற்பண்புகளைப் பாராட்டிப் பாடிய பாடல்கள் பலவாகும்.

புலவர்கள் அரசர்பால் பரிசில் பெற்று மீண்டும் தம் ஊர் செல்லும்போது வள்ளல்களை நாடிச் செல்லும் புலவர்களே வழியில் சந்திப்பதுண்டு. உடனே அவர்தம் வறுமையைப் போக்க விழைந்து, அவர்களைத் தமக்குப் பரிசில் ஈந்து மகிழ்ந்த மன்னர்பால் ஆற்றுப்படுத்துதல் வேண்டும். தமக்குப் பரிசில் தந்த மன்னனுடைய சிறப் பியல்புகள், அவனது அரண்மனைச் சிறப்பு, நாட்டுச் சிறப்பு, நகரச் சிறப்பு, அங்ககாத்திற்குச் செல்லும் வழி பற்றிய விவரங்கள் இன்ன பிறவற்றைப் பரிசில் பெற்று மீளும்புலவர், வழியில் காணப்பட்ட புலவர்க்கு விரித்துரைத்து அவரை அவ்வள்ளல்பால் ஆற்றுப் படுத்தல் ஒரு நீண்ட பாவாக அமையும். இங்ஙனம் அமைந்த பாட்டு புலவர் ஆற்றுப்படை எனப்படும், இங் கனமே பாணரை ஆற்றுப் படுத்தலும் உண்டு. அது பாண் ஆற்றுப்படை எனப்படும். இவ்வாறே விறலியை ஆற்றுப் படுத்தலும் உண்டு. அது விறலி ஆற்றுப்படை எனப்படும். இப்படியே கூத்தரை ஆற்றுப்படுத்தலும் வழக்கம். அது கூத்தர் ஆற்றுப்படை எனப் பெயர் பெறும். இத்தகைய ஆற்றுப்படைப் பாடல்களைப் பத் துப் பாட்டில் காணலாம். புற நானுாற்றிலும் பல பாடல் கள் உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/38&oldid=641910" இலிருந்து மீள்விக்கப்பட்டது