பக்கம்:புதிய தமிழகம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் இராசமாணிக்கனுர் 43

கின்றன. வேறு இடங்களில் கிடைக்காத சதுர நான யங்கள் இங்கு மிகுதியாகக் கிடைக்கின்றன. அவை யனேத்தும் கொற்கைப் பாண்டியருடையனவே என் பதில் ஐயம் இல்லை.

"கொற்கையில் கிடைத்த செப்பு நாணயங்கள் சில வற்றில் முதலாம் இராசேந்திர சோழன் (கி. பி. 1012.1044) உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. நாணயத் தின் ஒரு புறத்தில் அவனது கின்ற கோலமும் மற் ருெரு புறத்தில் அவனது இருந்த கோலமும், பொறிக் கப் பட்டுள்ளன. இத்தகைய நாணயங்கள் சோழ நாட் டின் வட எல்லே முதல் குமரிமுனைவரையுள்ள தென் இந்தியப் பகுதிகளில் காணப்படுகின்றன. இதல்ை, சோழர் கொற்கை உள்ளிட்ட பாண்டிய நாட்டைக் கைப்பற்றி யாண்டனர் என்பது தெளிவாகிற தன்முே?' என்று கால்டுவெல் பாதிரியார் கூறியிருத் தல் கவனிக்கத் தகும்.

சிறந்த முறையில் பல நூற்ருண்டுகளாகத் தொடர்ந்து கடல் வாணிகம் நடைபெற கிலேக்களமாக இருந்த கொற்கை, சோழரது கடற்றுறைப் பட்டின மாகிய காவிரிப்பூம்பட்டினம் போன்று, அயல்நாட்டு வணிகர் த ங் கி யி ரு க் க த் தக்க மாடமாளிகைகளைக் கொண்டதெருக்களையும், நம் நாட்டு வணிகர் வாழ்த் .தக்க வளம் மிகுந்த தெருக்களையும், பல துறைத் தொழிலாளர்கள் வாழத்தக்க தெருக்களையும், பல தொழிற்சாலைக்ளேயும், வணிக இடங்களையும், கப்பல் களில் ஏற்றத் தகும் பொருள்களே வைக்கத் தக்க பண்ட சாலைகளையும் இறக்குமதியாகும் பொருள்களே வைக்கத் தக்க பண்ட சாலைகளையும், பெரிய கடைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/43&oldid=641915" இலிருந்து மீள்விக்கப்பட்டது