பக்கம்:புதிய தமிழகம்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 புதிய தமிழகம்

பிடிக்கப்பட்டுள்ளன. நாங்கள் அவற்றுள் ஒன்றன் ைேரப் பருகிைேம். அது குடிரோகவே இருக்கின்றது. ஏரிபோன்ற அவ்வகன்ற இடமெங்கும் பண்டைக்கால மட்பாண்டச்சிதைவுகள் காணப்படுகின்றன. இவையும், உறை கிணறுகளும், கோவிலும் அங்கு இருத்தலே நோக்க, அப்பரந்த இடம் முழுமையும் பண்டைக்காலத் தில் கொற்கை நகரின் ஒரு பகுதியாக இருந்திருத்தல் வேண்டும் என்று கருத இடங்தருகிறது. அப்பரந்துள்ள பகுதி பிற்காலத்தில் பள்ளமாகி நீர் கிற்கும் இடமாக மாறியிருத்தல் வேண்டும்.

வெற்றி வேலம்மன் கோவிலுக்கு நேர்மேற்கில் பழுதுபட்ட சிவன் கோவில் ஒன்று வாழைத்தோட்டத் துக் கிடையில் இருக்கிறது. அதனில் இப்பொழுது சிவ லிங்கம் இல்லை; பிள்ளையார் திருவுருவம் இருக்கின்றது. கோவிலின் கருவறை மட்டுமே எஞ்சி கிற்கின்றது. அதன் சுவர்களில் பல கல்வெட்டுகள் காணப்படுகின் றன. அவற்றில் ஒருபகுதியைப் படத்திற் பாருங்கள். அக்கோவிலே அக்கசாலை ஈசுவாமுடையார் கோவில் என்று கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. அக்கசாலை என்பது முன் சொல்லப்பட்ட ஏரிபோன்ற பரந்த வெளிக்கு அப்பால் உள்ள சிற்றுர் ஆகும். பண்டை காலத்தில் அக்கசாலை என்பது, அச்சிவன் கோவில் உள்ள பகுதியையும் உள்ளடக்கியதாக இருந்ததென்று கருத இக் கோவிற் கல்வெட்டு இடங்தருகிறது. அக்க சாலையில் இன்றும் கிலத்தைத் தோண்டும் பொழுது பல நாணயங்கள் கிடைக்கின்றன என்றும், அங்குப் பல காலமாக வாழ்ந்து வந்தவருட் பெரும்பாலர் பொற் கொல்லரே என்றும், அவர்கள் இப்பொழுது பிழைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/46&oldid=641918" இலிருந்து மீள்விக்கப்பட்டது