பக்கம்:புதிய தமிழகம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்குன்றனர் பொன்மொழிகள்

சங்ககாலப் புலவர்

சங்ககாலத்தில், இன்று நமது சமுதாயத்திலுள்ள முதலியார், பிள்ளே, செட்டியார், ஐயர், ஐயங்கார் என்ற சாதிப் பெயர்களோ சாதிகளோ இருந்தமைக்குச் சான்று இல்லை. இயற்பெயர் சாத்தன்' என்று இருந் தால், அச்சாத்தன் மரியாதைக்குரியவகை மாறு ம் பொழுது ஆர் விகுதி கொடுக்கப்படும். அவன் சாத்த னர் என வழங்கப்படுவான்; கபிலன், கபிலர் என்று வழங்கப்படுவான். அவன் இன்ன ஊரினன் என்ப தைக் குறிக்க ஊர்ப்பெயர் பெயருக்குமுன் குறிக்கப் படும்; சீத்தலைச் சாத்தனர் , உறையூர் மோசியார் என்றுற்போல வரும். ஒரே ஊரில் ஒரே .ெ ப ய ர் கொண்ட புலவர் பலர் இருப்பின், அவர் செய்து வந்த தொழிலால் வேறுபாடு குறிக்கப்படும், கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனர்' என்ருற்போல வரும். பிறந்த ஊர் வேருகவும் தங்கித் தொழில் நடத்தும் ஊர் வேருக வும் இருந்தால் இவ்விரண்டு ஊர்களையும் அவன் செய் யும் தொழிலேயும் அவனது இயற்பெயரையும் சேர்த்து வழங்குதல் பண்டை மரபு; சீத்தலை என்னும் ஊரிலே பிறந்த சாத்தனர் மதுரையில் கூலவாணிகராக இருந் தார் என்பதை உணர்த்த மதுரைக் கூலவாணிகன் சித்தலைச் சாத்தனர் என்று குறிக்கப்பட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/50&oldid=641922" இலிருந்து மீள்விக்கப்பட்டது