பக்கம்:புதிய தமிழகம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் இராசமாணிக்கனுர் 51

மயிலேயார், நாகையார் என்முற்போலப் பிறந்த ஊரால் பெயர் பெற்ருேர் பலர். பூங்குன்றம் என்பது பாண்டியநாட்டு ஊர்களில் ஒன்று. இன்றைய இராம காகபுரம் மாவட்டத்தில் உள்ள மகிபாலன் பட்டியே சங்ககாலத்தில் பூங்குன்றம் எனப் பெயர் பெற்றிருக் தது என்பது கல்வெட்டால் தெரிகின்ற உ ண் ைம யாகும். கோள் கிலேகளைக் கணக்குப் பார்த்து மக்க ளுக்கு நேரும் நலன் தீமைகளைக் கணித்துக் கூறுபவன் இக்காலத்தில் சோதிடன் எனப்படுகிருன்; அக்காலத் தில் கணியன்' எனப்பட்டான். பூங்குன்றம் எ ன் ற ஊரில் வாழ்ந்த கணியன் ஒருவன், கணியன் பூங்குன்றன் என்று பெயர் பெற்ருன். அக்கணியன் தன் தொழி லோடு நில்லாது, பைந்தமிழ்ப் பாங்குறக் கற்றுப் பெரும் புலவனுகவும் விளங்கினன்.

சங்ககாலப் பெரும் புலவர்களான நக்கீரர், கபிலர், பாண்ர் இவர்தம் வரிசையில் வைத்து எண்ணத் தக்க பெரும் புலவகை அப்பெருமகன் விளக்கமுற்றிருந் தான். அப்பெரியோன் அருளிய பாடலொன்று புற நானூற்றில் (192) உள்ளது. பழந்தமிழர் கொண்டிருந்த சீரிய கருத்துக்களே அப்பாவில் வைத்துப் புலவன் பாடி யுள்ளான்.

புலவர் பொன்னுரை

(1) எமக்கு எந்த ஊரும் எமது ஊரே, எல்லோ ரும் எம்முடைய சுற்றத்தார். (2) ஒருவனுக்குக் கேடோ ஆக்கமோ வருவது அவனுலேயே தவிரப் பிறரால் அன்று; (3) சாதல் என்பது புதியதன்று கருவில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/51&oldid=641923" இலிருந்து மீள்விக்கப்பட்டது