பக்கம்:புதிய தமிழகம்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 புதிய தமிழகம்

ஒழுக்கந் தவறிய மக்கள்

நாம் தலைமயிரை மிக்க கவலையோடு பாதுகாக்கின் ருேம். அதற்கு எண்ணெய் பூசுவதிலும், அதனை ஒழுங் காகச் சீவுவதிலும் பொழுகைச் செலவழிக்கிருேம் இவ்வாறு நம்மால் விரும்பி வளர்க்கப்படும் தலைமயிரில் ஒன்று தலையிலிருந்து விழுந்துவிடுமாயின், நாம் அதற் காகத் துக்கம் கொண்டாடுவதில்லை. விழுந்த மயிரை விழுந்த அக்கணமே மறந்து விடுகின்ருேம்.

நமது தெருவில் கல்வி கேள்விகளால் சிறந்த பெரியோர் இருக்கின்ருர். நாம் அவரைக் கானும் பொழுதெல்லாம் மகிழ்ச்சியோடு கை குவித்து வணங்கு கின்ருேம். இவ்வாறு நம்மால் மதிக்கப் பட்டுவரும் அவர் ஒருநாள் சிறுமதியால் நெறி தவறிவிடுகிருரர். இதனை உணர்ந்த நமக்கு அவர் மீது வெறுப்பு உண் டாகிறது. அவரிடம் கொண்டிருந்த அன்பும் மதிப்பும் நம்மைவிட்டு நீங்கிவிடுகின்றன. அவரை ஒருபொருளாக ங்ாம் மதிப்பதில்லை.

- §

தலையில் இருந்த வரையில் தலைமயிர் சிறப்புப் பெற்றிருந்தது; கலையிலிருந்து நீங்கிய பிறகு சிறப்பை இழந்தது. அது போலவே ஒழுக்க நெறியில் இருந்த வரையில் பெரியவர் மதிப்புப் பெற்ருர், ஒழுக்க நெறியி லிருந்து தவறியவுடன் தமக்குரிய மதிப்பை இழந்தார். சுருங்கக் கூறின், அப்பெரியவர் த லேயி லி ரு ந் து உதிர்ந்த மயிருக்குச் சமமானர். -

'கலேயி னிழிந்த மயிரனேயர் மாந்தர் நிலையி னிழந்தக் கடை,”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/62&oldid=641934" இலிருந்து மீள்விக்கப்பட்டது