பக்கம்:புதிய தமிழகம்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 புதிய தமிழகம்

பெண்ணே நீராட்டுதற்குரிய நீ ை க் குடங்களில் கொண்டு வந்து தந்தனர். மக்களைப் பெற்ற வாழ்வரசி கள் நால்வர் அக்குடங்களே வாங்கி, ‘கற்பு நெறியினின் ஆறும் வழுவாமல் பல நல்ல பேறுகளையும் தந்து கணவனை விரும்பிப் பேணும் விருப்பத்தையுடையை ஆகுக' என்று வாழ்த்திக் கொண்டே மணமகளை நீராட்டினர். அந்நீரில் மலர்களும், நெல்மணிகளும் இடப்பட்டிருந் தன. இங்ஙனம் நீராட்டப் பெற்ற மணமகள் புத்தாடை யணிந்து மணப் பந்தலில் அமர்ந்தாள். பின்பு சுற்றத் தார் விரைந்து வந்து, "பெரிய மனேக்கிழத்தி ஆவாய்,” என்று வாழ்த்தினர்.

அன்று இரவு மணமக்கள் ஒன்று கூடினர்.

"உழுந்துதலைப் பெய்த கொழுங்களி மிதவை பெருஞ்சோற் றமலை விற்ப நிரைகால் தண்பெரும் பந்தர்த் தருமணல் ளுெமிரி மனைவிளக் குறுத்து மாலை தொடரிக் கனையிருள் அகன்ற கவின்பெறு காலைக் கோள்கால் நீங்கிய கொடுவெண் டிங்கள் கேடில் விழுப்புகழ் நாடலை வந்தென உச்சிக் குடத்தர் புத்தகல் மண்டையர் பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர் முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப் புதல்வற் பயந்த திதலையல் வயிற்று வாலிழை மகளிர் நால்வர் கூடிக் கற்பினின் வழாஅ கற்பல உதவிப் பெற்ருேற் பெட்கும் பிணையை யாகென நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/70&oldid=641942" இலிருந்து மீள்விக்கப்பட்டது