பக்கம்:புதிய தமிழகம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 புதிய தமிழகம்

செல்லுஞ் சொல் வல்லாராகிய கோவூர் கிழாரின் அறிவுரை கேட்ட இருபெரு வேந்தர் மனமும் நாணின; தங்கள் இழி செயலுக்கு வருந்தித் தலையிறைஞ்சிப் புல வர் பெருமான வணங்கினர். புலவரும், தம் குற்றத்தை யுணர்ந்து வருந்திய மன்னர்களை நோக்கி, புவிபுரக் கும் மன்னர் பெரு மக்களே கழிந்ததற் கிரங்காமல், இனி யேனும் நீங்கள் ஒன்றுபட்டு வாழ்வதுடன், தமிழ் நாட்டுப் பிற மன்னருடனும் சேர்ந்து பகையின்றி நெடிது வாழுங்கள்,' என வாழ்த்திப் போரை நிறுத்தி ஏகினர்.

2 -

கோவூர் கிழாரது பெருந்தன்மையை விளக்கப் பிறிதொரு சான்றும் காணலாம். மேற் கூறப்பெற்ற நலங்கிள்ளியும் நெடுங்கிள்ளியும் உறையூர் முற்றுகை யில் ஈடுபட்டிருந்தகாலே, கோவூர் கிழார் அற்குத் தோன்றி முற்றுகையால் உண்டான துன்ப நிலையைக் கண்டு மன வருந்திக் கொண்டிருந்த பொழுது ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. /

இளந்தத்தன்

சங்க காலப் புலவர் பெருமக்கள் 'திருவேறு தெள் ளிய ராதலும் வேறு" என்னும் இலக்கணத்திற்கு ஒர் இலக்கியமாக விளங்கினர். அறிவும் வறுமையும் ஒன்று பட்டுக் கைகோத்துச சென்று புலவர் வாழ்வில் பங்கு கொண்டன. ஆயினும் பெருந்தன்மையையே அணிகல கைக் கொண்ட அப்பெரு மக்கள் 'பழுமரங்தேரும் பறவை போல வள்ளலே நாடி வளம் பெற்று வறுமை யொழிவர், வாங்கி வந்த வளமனத்தையும் வைத்தினிது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/76&oldid=641948" இலிருந்து மீள்விக்கப்பட்டது