பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 சு. சமுத்திரம் அவளுக்கு மாபெரும் கொடுமையாகத் தெரிந்தது. மடமடவென்று நான்கைந்து குடங்களை நிரப்பிவிட்டு தன் வீட்டுக்குப் போனாள். சரஸ்வதி அந்த ஒலைவீட்டின் முற்றத்திற்கு வந்த போது குடிசைக்குள் பொன்னையாவும் அம்மாவும், தன்னைப்பற்றி பேசுவது கேட்டதால், அவள் அங்கேயே நின்றாள். "ஒமக்கு மூளையே கிடையாது. மிஞ்சி மிஞ்சி இருந் தால், அவளுக்கு இப்போ இருபது இருக்கும். இன்னும் ரெண்டு வருஷம் கழியட்டுமே. நாம இப்பதான் ஏதோ சாப்பிடறோம்.' 'அப்படி இல்ல பிள்ள. மாப்பிள்ளைக்கி செங்கல் பட்டு பக்கத்துல, ஒரு மில்லுல பெரிய வேலையாம். பூர்வீகம் குட்டாம்பட்டியாம். எழுநூறு ரூபாய் வாங்கு றானாம். கல்யாணம் ஆன ரெண்டு வருஷத்துல பெண் டாட்டி இறந்துட்டாளாம்... ஏழு வயசில ஒரு பையன் மட்டும் இருக்கானாம். இவ்வளவுக்கும் வயது முப்பதாறு தானாம்.' "நான் உயிர விட்டாலும் விடுவேனே தவிர. என் மவள ரெண்டாந்தாரமா அதுவும் பாதிக் கிழவனுக்கு" கொடுக்க மாட்டேன்.' 'ஏமுழா வீம்பு பிடிக்கே? நம்ம தங்கப்பாண்டி பாத்த மாப்பிள்ளை நாம தட்ட முடியுமா? வாக்கு கொடுத்துட்டேன்னு வேறே சொல்லுதான்.' 'அவனுக்குத்தான் ஒரு மகள் இருக்காளே. அவள கொடுக்கச் சொல்லும்.' பொறிகலங்கிப் போனவள்போல், சரஸ்வதி திடுக் கிட்டாள். அப்படியானால், அவள் இந்த ஊரை விட்டு