பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்வித் தீ 95 விட்டுப் போய்த்தான் ஆக வேண்டுமா? அதுவும் அம்மா சொன்னதுமாதிரி ஒரு பாதிக் கிழவனுக்கு... முடியாது... என்ன ஆனாலும் முடியாது... இந்தத் தங்கப்பாண டி மாமாவுக்கு நான் என்ன கொடுமை செய்தேன்? அப்பா ஏன் அவர் வாக்கை தேவ வாக்கா எடுக்கார்? இந்த தங்கப்பாண்டியை மட்டம் தட்டுறதுக்காவது நான் மாட்டேன்... மாட்டேன்...' திடீரென்று, அவள் நினைக்காமலே, சண்முகம் அவள் நெஞ்சுள் வந்து நின்றான். உடம்பின் ஒவ்வொரு அணுவிலும், அவன் ஊடுருவி நிற்பது போன்ற பிரமை. அப்பா... அம்மா பேசுவதை அவன் அசரீரியாக நின்று கேட்டுக்கொண்டிருப்பது போலவும், தக்க சமயத்தில் தலையிடுவான் என்பது போன்றும் ஒரு எண்ணம். ஒரு கற்பனை... ஒரு நப்பாசை. இதுவரைக்கும் அவள் அவனிடம் தனியாகப் பேசியதில்லை. சரசு’ என்று சொல்லமாட்டாரா என்று ஏங்கும் அவளை, இன்றுவரை "டீச்சர்' என்றுதான் கூப்பிடுகிறான். படித்த கர்வம் இல்லாமல், உளளுர் டீக்கடைகளில் மற்ற ஏழைகளோடு அமர்ந்து, மசால் வடையைத் தின்றுகொண்டே, அவர் களோடு வாயால் மல்லாடுவதும், பாமர மக்களுக்கு கடிதங்கள் எழுதுவதும், சில சமயம் அவர்களை அதியா யங்களில் இருந்து மீட்பதும், ஆதரவு கொடுப்பதும் அவனுக்குப் பொழுதுபோக்கு... பொழுதுபோக்கல்லஒரு விசுவாசமான தொண்டு. ஊரில் எல்லா பிரமுகர் களுக்கும் அவன் கவாலி'. இது ஒன்றே போதும், அவன் நல்லவன் என்பதற்கு. அவரு இல்லாத பள்ளிக்கூடம், 'களை இல்லாம போயிட் டு...! எப்டி கலகலப்பா பேசுவாரு. எப்டி வெட்டு ஒண்னு துண்டு ரெண்டுன்னு பேசுவாரு. இவ்வளவுக்கும் எனக்கு ஜூனியர். வேலையில சேர்ந்து மூணு மாதந்தான் ஆகுது. மானேஜர இப்படியே விடப்