பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 சு. சமுத்திரம் படாது. கொஞ்சங் கொஞ்சமா எதிர்த்துப் பேசணுமுன்னு எப்படிச் சத்தம் போட்டு கத்துவாரு. அதுவும் இந்திரா இருக்கும் போதுகூட. அவரப் பார்த்ததும பிள்ளிங்ககூட 'ஸார்... கதை சொல்லுங்க லார்னு எப்டி மொய்க்கு துங்க. அடிக்காமலே அவங்கள வசியப்படுத்துற வேலய எங்க கத்துக்கிட்டாரு? அவங்கள மட்டுமா 'வசக்கி வைத் திருக்காரு? ஒவ்வொரு ஆசிரிய ஆசிரியைக்கும் வக்கனை' வச்சிருக்க... இந்த பிள்ளிங்ககூட அவருக்கு... வக்கணையே வைக்கலியே. தங்கப்பாண்டி, தொந்திப் பாண்டியாம் கனகம் உச்சர், தார்க்குச்சியாம். தங்கச்சாமி... பிள்ளப் பூச்சியாம். வேலாயுதம், கரும்பனையாம். நான் , மேல கண்ணியாம். ஆனால சண்முகத்துக்கு மட்டும் வக்கனை கிடையாதாம்! எல்லோரையும் அதட்டுற மானேஜர் மாமா கூட, அவரப் பார்த்துச் சிரிக்காரே. ஒருவே ள இவரும் அவரு மகள விரும்புறாரோ? அதனாலதான் அவரப் பார்த்ததும் தானாச் சிரிக்கிற என்னை "டிச்சர் டீச்சர்னு சொல்லுதாரோ? 'ஸெட் கணக்குல டிரெ யினிங் எடுக்க மதுரைக்குப் பேrனவரு... எப்போ வரப் போறாரோ... பார்த்து எவ்வளவு நாளாச்சு? பாவி மனுஷன் ஒரு தடவ வந்தா என்ன? நான் இவரை நினைச்சி, அந்த நெனப்புலயே சுகத்த அனுபவிக்கையில மாப்பிள்ள பாக்காங்களாம் மாப்பிள்ள. பாத்துப் புடலாம். வீட்டுக்குள் சத்தம் வலுத்துக் கேட்டது. சரஸ்வதி, ஒரே தாவாகத் தாவி தந்தை முன்னால் போய் நின்றாள். 'எப்பா! நான் என்ன ஒங்க தலையிலயா உட்கார்ந்திருக்கேன்...? சுமக்க முடியாம கஷ்டப்படுநீங்க. எனக்கு இப்போ 'அது' ஒண்னும் வேண்டாம்.' பொன்னையா, மகளை ஆழமாகவும், அகலமாகவும் பார்ததார்! 'ஒரு வயதுப பெண் , தன் கல்யாணத்தைப் பற்றிப் பேசுவதா... அதுவும் பெத்த அப்பனிடம். இந்த விஷயத்தில் தலையிட இந்தப் பய மவளுக்கு என்ன ரைட் இருக்கு? எல்லாம் இந்த கழுத முண்ட கொடுக்கிற