பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்வித் தீ 97 செல்லம். பொன்னையா கத்தினார். 'பாத்தியாடி... ஒன் மவள் பேசுற பேச்ச? வர வர அவளுக்கு நான் அப்பனா தெரியாமப் போச்சுப் பாத்தியா? ஏன பேச மாட்டாள்? இருநூற்று ஐம்பது ரூபாய் சம் பாதிக்கால்லா. இந்த மரம் வெட்டி கண்ணுக்குத் தெரியுமா?" சரஸ்வதி, முதலில் சாந்தமாகத் தான் பேசினாள். "ஒம்ம மனசு நோவக்கூடாதுன்னு ரெண்டு வருஷமா மானேஜர் வீட்ல தினமும் தண்ணி எடுத்து ஊத்தறேன். சில சமயத்துல பாத்திரத்த தேக்கிறேன். தண்ணிக் கிணத்துல கேவலமாப் பேசுறாளு வ. ராசம்மா அத்த வேற, நாலுபேரு முன்னால அதட்டிட்டுப் போனாள். ஊர்ல. கசாமுசான்னு பேசுறாங்களாம். வாத்திச்சி வேல பாக்கற ஒவ்வொருத்தியும், ராணிமாதிரி இருக்கையில, நான்... இன்னும் நாயிலயும் கேவலமா வேல பாக்கேன். எல்லாம் ஒம்ம மனசு நோவக்கூடாது என்கிறதுக்காக. அப்படியும் நான் ஒமக்குப் பிடிக்கல. செங்கல்பட்டு கிணத்துல தள்ளப்பாக்கீங்க.' சரஸ்வதி விம்மினாள். சுவரில் தலையை வைத்துக் கொண்டு கேவிக் கேவி அழுதாள். பொன்னையா எழுநதார் மகளை அடிக்கப் போகிறாரோ என்று மனைவிக்காரி படபடப்போடு எழுந்தாள் ஆனால்-பொன்னையா, சரஸ்வதியின் இரண்டு கை களையும் பிடித்துக்கொண்டு நின்றார். மகள்... உள்ளு ரப்பட்ட வேதனை, மரம் வெட்டி மரம் வெட்டி மரமாகப் போன அவருக்கு, இப்போதுதான் உறைத்திருக்க வேண்டும், "ஏம்மா அழுவுற ஒன் இஷ்டத்த மீறி எதையும் செய்யமாட்டேன். இனிமேல் நீ தங்கப்பாண்டி வீட்டுக்கு மட்டுமல்ல, நம்ம வீட்டுக்கும் தண்ணி எடுக்கப் போகாண்டாம்-என்ன ஆனாலும் சரி ւ4.-7