பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்வித் தீ 99 'சரி, அதெல்லாம் பேச இப்ப டயம் இல்ல. அட்புறம் வேற ஏதாவது விஷயம் உண்டா?’’ 'இந்த மாரிக்கு எக்ஸ்டன்ஷன் கொடுக்கிறது தப்புன்னு தோணுது.' ஏன்?" "சீனிவாசன் கூட எப்பப் பார்த்தாலும் கிசுகிசுன்னு பேசிக்கிட்டு இருக்காள். வேலாயுதம் மேல ஒரு கண்ணு போடுறாள். அவனும் பல்லக் காட்டுறான். சீனிவாசனும் சகுனிமாதிரி லீவ் வேகன்ஸி’க்கு ஹரிஜன்... பெர்மனன்ட் வேகன்ஸிக்கு பேக்வேர்ட்... இல்லன்னா பார்வர்டுன் னு அவள் கிட்ட சொல்லுக்குச் சொல்லு சொல்லிக்கிட்டு இருக்கார்.' தங்கப்பாண்டி எதுவுமே பேசவில்லை; லேசாகச் சிரித்துக்கொண்டார். இதற்குள், இரண்டாவது பீரியடுக் கான மணியடித்தது. இந்திரா, வெளியே வந்தாள். அவளைப் பார்த்ததும் கும்பல் கும்பலாக நின்று பேசிக கொண்டிருந்த ஆசிரிய-ஆசிரியைகள், வகுப்புக்களைப் பார்த்து ஓடினார்கள். தார்க்குச்சிமாதிரி ஒல்லியாக இருந்த ஜி பி.எப். ஆசிரியை கனகம் மட்டும், இந்திரா வைப் பார்த்து, 'இந்த சேலை... ஒனக்குன்னே நெய்தது மாதிரி இருக்கும்மா... இன்னும் சேலய... உடம்போட சேர்த்து இறுக்கிக் கட்டினால், ஒனக்கு எடுப்பா இருக்கும். இப்படி... தொளதொள ன்னு சேலைய வைக்காத" என்றாள். அப்படிச் சொல்லிவிட்டதால், தனது ஜி.பி. - ப் காய், பழுத்துவிடும் என்று நினைத்துக்கொண்டாள். இந்திரா முகத்தை ஒரு வெட்டு வெட்டிக்கொண்டு, தன் வகுப்புக்குப் போனாள். போனவுடனேயே கண்ணகியை ஏன் கற்புக்கரசின்னு சொல்கிறோம்?' என்று கேள்வி கேட்டதும், பயல்கள் அமுக்கலாகச் சிரித்தார்கள். இரண்டு கட்டிடங்களுக்கும் மத்தியில் இருந்த இடுக்கை’ப் பார்த்து, கண்ணடித்துக் கொண்டார்கள்.