பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்வித் தீ 101 "ஆமா... ஒம்ம் வகுப்புல ஒரு பெஞ்சி உடஞ்சி கிடக்கே... , ன்?' 'அதுவா? நேத்து... முழுக்கள்' என்றால் என்னன்னு ஒரு கேள்வியைப் போட்டேன். பதில் சொல்லாத பயலுவள பெஞ்சி மேலே ஏத்துனேன். அந்தப் பெஞ்சி ஏற்கனவே இத்துப் போனது. சடசடன்னு உடைஞ் சிட்டு...' ‘'வேணுமுன்னே உடைச்சிருப்பாங்க. இனிமேல் எவனையும் பெஞ்சி மேலே ஏத்தாதிங்க தெரியாத கேள்விகள ஏன் கேட்கிறிய...? எனக்கே இதுக்கு பதில் தெரியாது ' 'ஆனால் நிறைய பயலுவ பதில் சொன்னாங்க. ஒங்கள மாதிரி, கொஞ்சம் பேருக்குத்தான் தெரியாது. இப்போ உள்ள சிலபஸ்படி... 'முழுக்கள் ... மிகை எண். குறை எண், கணங்கள் இந்தமாதிரி டெர்ம்ஸ் இக்கு அர்த்தம் தெரிஞ்சாத்தான், மேல்கொண்டு பாடம் நடத்த முடியும்.' 'சரி போகட்டும்; என்ன விஷயம்?" 'அதுதான் சொன்னேமில்லா... என் மகளை... இன் னைக்கி அனுப்பியாகணும். கையில சத்தியமாக் காசு இல்ல...' "'என்ன ஸார் நீங்க? ஒரு அவசரத்துக்கு பணத்த ஒரு வாரம் வச்சிக்கப்படாதா? ஒடியா போகப் போறேன். ஒங்களுக்காக எப்படில்லாம் வளைஞ்சி கொடுக்கேன். இருநூறு பிள்ளிங்களை... முந்நூறுக்கு மேல காட்டுறேன். முப்பது பேருக்குக் கீழே இருந்தால் ஒரு செக்ஷன்தான். நான் இருபத்தஞ்சு பிள்ளிங்களை வச்சிக்கிட்டு, ரெண்டு செக்ஷனா காட்டுறேன். ஒரு வகுப்ப மட்டுமா காட்டு றேன்...? எல்லாம் யாருக்காக? என் பாட்டுக்கு இருக்கிற